Home தென்னிலங்கைச் செய்திகள் தனிக்கட்சி ஆட்சி முறைமையை ஏற்படுத்த ஜே.வி.பியினர் முயற்சி – சம்பிக்க குற்றச்சாட்டு!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

தனிக்கட்சி ஆட்சி முறைமையை ஏற்படுத்த ஜே.வி.பியினர் முயற்சி – சம்பிக்க குற்றச்சாட்டு!

Share
Share

“இலங்கையில் தனிக்கட்சி ஆட்சி முறைமையை ஏற்படுத்துவதற்கு ஜே.வி.பி. முயற்சித்து வருகின்றது. இதற்கு எதிராக அனைவரும் அணிதிரள வேண்டும்.” – இவ்வாறு முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,

“1982 இல் அரச சொத்துகளுக்குக் கட்சியொன்று சேதம் விளைவித்ததால்தான், சட்ட நடவடிக்கையின் நிமித்தம் பொதுச் சொத்து சட்டம் கொண்டுவரப்பட்டது.

2022 இல் நாடாளுமன்றத்தைக் கொளுத்துவதற்காக வீதியில் இறங்கிய கட்சிதான், பொதுச் சொத்து சட்டத்தின் கீழ் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைக் கைது செய்துள்ளது.

தனிக்கட்சி முறைமையொன்றை ஏற்படுத்துவதற்காக முன்னெடுக்கப்படும் அரசியல் சூழ்ச்சியின் மற்றுமொரு அங்கமே ரணில் விக்கிரமசிங்கவின் கைதாகும். எனவே, அரசியல் வேறுபாடுகள் இருப்பினும், ஜனநாயகத்தை மதிக்கும் அனைத்துத் தரப்பினரும் இதற்கு எதிராக அணிதிரள வேண்டும்.

அவ்வாறு இல்லையேல் 1987 மற்றும் 1989 காலப்பகுதியில் அவர்களால் செய்ய முடியாமல்போன தனிக்கட்சி ஆட்சி முறைமையை உருவாக்குவதற்கு முற்படக்கூடும்.” – என்றார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

நீதிமன்ற நுழைவைத் தடுத்தவர்களை கைது செய்யுமாறு சி.ஐ.டிக்கு உத்தரவு!

முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்கு எதிரான வழக்கு விசாரணையின் போது நீதிமன்ற நுழைவைத் தடுத்தவர்களை உடனடியாகக் கைது...

குளியாப்பிட்டியில் கோர விபத்து! மாணவர்கள் இருவர் உட்பட மூவர் பலி!!

குருநாகல் மாவட்டம், குளியாப்பிட்டியில் பல்லேவல பாலத்துக்கருகில் இன்று புதன்கிழமை காலை இடம்பெற்ற கோர விபத்தில் பாடசாலை...

தென்னக்கோனுக்கு பிணை!

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனைப் பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம்...

ரணில் கைது அரசியல் பழிவாங்கல் அல்ல என்கிறது அரசாங்கம்!

பொதுச் சொத்துக்களை தவறாக பயன்படுத்துவது குற்றம் எனவும் அதற்காக கைதுசெய்யப்படுவது அரசியல் பழிவாங்கலாக அமையாது எனவும்...