Home தாயகச் செய்திகள் செம்மணிப் புதைகுழி விவகாரம்: தமிழ்க் கட்சிகள் யாழில் இன்று முக்கிய சந்திப்பு!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

செம்மணிப் புதைகுழி விவகாரம்: தமிழ்க் கட்சிகள் யாழில் இன்று முக்கிய சந்திப்பு!

Share
Share

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பில் தமிழ்க் கட்சிகள் யாழ்ப்பாணத்தில் இன்று திங்கட்கிழமை ஒன்றுகூடிப் பேசவுள்ளன என்று தெரியவருகின்றது.

ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத் தொடர் நடைபெறவுள்ள நிலையில் செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பில் தமிழ்க் கட்சிகள் கூட்டாகவும், அதேநேரம் தனித்தனியாகவும் பல்வேறு சந்திப்புக்களை மேற்கொண்டுள்ளதுடன் பல்வேறு தீர்மானங்களையும் எடுத்திருக்கின்றன.

இவ்வாறான நிலையில் யாழ். நகரிலுள்ள ஹோட்டல் ஒன்றில் இன்று காலை தமிழ்க் கட்சிகள் பலவும் மீண்டும் ஒன்றுகூடவுள்ளன என்று    தெரிவிக்கப்படுகின்றது.

ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் ஏற்பாட்டில் அந்தக் கூட்டணியில் உள்ள கட்சிகளின் இணைத் தலைவர்களும் அதேபோன்று ஏனைய சில கட்சிகளின் தலைவர்களும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளனர் என்று தெரியவருகின்றது.

இந்தச் சந்திப்பின் முடிவில் தமிழ்க் கட்சிகள் இணைந்து இன்று மதியம் விசேட ஊடக சந்திப்பொன்றையும் நடத்தவுள்ளன.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

இலங்கை அழைத்தே தாக்கி அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் வந்தது!

இலங்கைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலால் அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் ‘டேனா’ இலங்கையின் அழைப்பின் பேரில்...

கொக்குத்தொடுவாய் பகுதியில் மக்களின் காணிகளை அபகரித்து உப்பளம் அமைக்க முயற்சி! மக்கள் எதிர்ப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் உப்பளத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மீனவர்களும்...

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீது 03 குற்றச்சாட்டுக்கள்!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள்...

நயினாதீவில் பூசகர் ஒருவர் கொலை!

யாழ்ப்பாணம், நயினாதீவில் இரு ஆலயப் பூசகர்களுக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு வாள்வெட்டில் முடிந்ததில், பூசகர்...