ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை தொடர்பான விசாரணைகளை குற்றப் புலனாய்வு திணைக்களம் மீண்டும் ஆரம்பித்துள்ளது.
முன்னதாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு மேலதிகமாக தற்போது புதுப்பிக்கப்பட்ட விசாரணைகள் நடத்தப்படுகின்றன என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
2009 ஆம் ஆண்டு ஜனவரி 9 ஆம் திகதி இரத்மலானையில் வைத்து லசந்த விக்ரமதுங்க படுகொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Leave a comment