Home தென்னிலங்கைச் செய்திகள் நாட்டில் மருந்துகளுக்கு பற்றாக்குறை – சுகாதார அமைச்சர்!
தென்னிலங்கைச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

நாட்டில் மருந்துகளுக்கு பற்றாக்குறை – சுகாதார அமைச்சர்!

Share
Share

கடந்த அரசாங்கத்தில் முறையான விலைமனுக்கோரல் முறைக்கு அப்பால் மருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டதால் நாட்டில் தற்போது சில மருந்துகளுக்குப் பற்றாக்குறை நிலவுவதாக சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். 

கடந்த ஆண்டு விலைமனுக்கோரல் இல்லாததன் விளைவாகவே சில மருந்துகளுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். 

அத்துடன் கடந்த ஆண்டு விலைமனுக்கோரல் விடுக்கப்பட்டிருந்தால் மருந்துகள் உரிய முறையில் இறக்குமதி செய்யப்பட்டிருக்கும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். 

அதேநேரம் தற்போதைய மருந்து பற்றாக்குறையை சமாளிப்பதற்கு பிராந்திய கொள்முதல்களுக்காக மருத்துவமனைகளுக்கு 3,500 மில்லியன் ருபாய் ஒதுக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

அத்துடன், சில நாடுகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி, மருந்துகளை நன்கொடையாகப் பெறுவதுடன், சில நாடுகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் இணக்கங்களும் ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

மயிலிட்டியில் நிற்கும் 62 இந்தியப் படகுகளும் அள்ளிச் சென்று அச்சுவேலியில் கொட்டப்படும்!

அத்துமீறி இலங்கைக் கடற்பரப்புக்குள் நுழைந்த குற்றச்சாட்டில் அரசுடைமையாக்கப்பட்டு மயிலிட்டித் துறைமுகத்தில் தரித்து நிற்கும் 62 இந்தியப்...

போக்குவரத்து சபை சாரதிகளுக்கு எச்சரிக்கை!

அனைத்து போக்குவரத்து சபை சாரதிகளும் பணிக்கு திரும்ப வேண்டும். அவ்வாறு செய்யத் தவறின் அவர்களை இடைநிறுத்த...

சித்துபாத்தியில் மேலும் 08 மனித எலும்புக் கூடுகள்!

அரியாலை மனிதப் புதைகுழியில் நேற்று வியாழக்கிழமை நடந்த அகழ்வில் 8 மனித எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டன. இதேநேரம்,...

பட்டதாரிகளை பணிக்கமர்த்த நடவடிக்கை!

வேலையற்ற பட்டதாரிகளை ஆசிரியர்களாக ஆட்சேர்ப்பு செய்வதில் தாமதத்துக்குக் காரணமான உயர் நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள 4 வழக்குகளின்...