Home தென்னிலங்கைச் செய்திகள் சோமரத்ன ராஜபக்ஷவை சந்தித்தது காணாமல் போனோர் பற்றிய அலுவலக அதிகாரிகள்!
தென்னிலங்கைச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

சோமரத்ன ராஜபக்ஷவை சந்தித்தது காணாமல் போனோர் பற்றிய அலுவலக அதிகாரிகள்!

Share
Share

கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கில் மேல் நீதிமன்றத்தினால் பிரதான குற்றவாளியாகப் பெயரிடப்பட்டு, மரணதண்டனை விதிக்கப்பட்ட லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷவை கடந்த வாரம் சிறைச்சாலையில் சந்தித்த காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் பிரதிநிதிகள், அவர் வெளிப்படுத்தவிருப்பதாக அறிவித்த விடயங்கள் தொடர்பில் கேட்டறிந்துள்ளனர்.

கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கில் மேல் நீதிமன்றத்தினால் பிரதான குற்றவாளியாகப் பெயரிடப்பட்டு, மரணதண்டனை விதிக்கப்பட்ட லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷ, அப்படுகொலை மற்றும் செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம் குறித்துத் தன்னிடம் கூறிய விடயங்களை உள்ளடக்கியும், இவ்விவகாரம் தொடர்பில் மீண்டுமொரு சுயாதீன விசாரணையைக் கோரியும் அவரது மனைவியான எஸ்.சி.விஜேவிக்ரம கடந்த ஜுலை மாதம் 10 ஆம் திகதியிட்டு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்திருந்தார்.

7 ஆம் இராணுவக் காலாட்படை தலைமையகத்தில் கொல்லப்பட்டு, செம்மணி சோதனைச்சாவடிக்குக் கொண்டுவரப்பட்ட கிருஷாந்தி குமாரசுவாமி மற்றும் அவரது குடும்பத்தாரின் சடலங்களை கப்டன் லலித் ஹேவாகேயின் ஆணைக்கு அமைவாகப் புதைத்ததைத் தவிர வேறெந்தக் குற்றத்தையும் தனது கணவர் புரியவில்லை எனவும், செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம் தொடர்பில் சர்வதேச விசாரணையொன்று முன்னெடுக்கப்படும் பட்சத்தில், அதில் சாட்சியமளிப்பதற்குத் தனது கணவர் தயாராக இருப்பதாகவும் அக்கடிதத்தில் கூறப்பட்டிருந்தது.

இக்கடிதம் பற்றிய செய்தி வெளியானதை அடுத்து, தாம் சோமரத்ன ராஜபக்ஷவை சந்தித்து மேலதிக தகவல்களைப் பெறுவதற்கு நடவடிக்கை எடுத்திருப்பதாக காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் கடந்த 18 ஆம் திகதி திங்கட்கிழமை சோமரத்ன ராஜபக்ஷவை சிறைச்சாலையில் சந்தித்த காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் அதிகாரிகள் மூவர், அவரிடம் விடயங்களைக் கேட்டறிந்தனர்.

இதன்போது கிருஷாந்தி குமாரசுவாமி மற்றும் அவரது குடும்பத்தாரின் படுகொலையில் தனது வகிபாகம், 1996 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் ‘தலையாட்டிகள்’ மூலம் நபர்கள் அடையாளங்காணப்பட்டு கைதுசெய்யப்படல் என்பன உள்ளடங்கலாக பல்வேறு விடயங்கள் தொடர்பில் சுமார் ஒருமணிநேரத்துக்கும் மேல் விபரித்தார்.

சோமரத்ன ராஜபக்ஷவிடமிருந்து பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக்கொண்டு முன்னெடுக்கவிருக்கும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் வெகுவிரைவில் தெளிவுபடுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

சித்துபாத்தி; மேலும் 10 மனித எலும்புக் கூடுகள்!

செம்மணி – சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இன்று மேலும் 10 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத்...

நாவற்குழியில் காணாமல் ஆக்கப்பட்ட இளைஞர்கள்:வழக்குத் தீர்ப்பு ஒக்டோபர் மாதத்துக்கு ஒத்திவைப்பு!

யாழ். தென்மராட்சி, நாவற்குழிப் பகுதியில் கடந்த 1996ஆம் ஆண்டு இராணுவத்தின் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் பின்னர் காணாமல்...

‘போரின் சாட்சியம்’ டொரொன்டோவில் அறிமுகமாகிறது!

இறுதிப்போரில் களத்தில் செய்தி சேகரித்த ஊடகவியலாளர் சுரேன் கார்த்திகேசு எழுதிய “போரின் சாட்சியம்” நூல் வெளியீட்டு...

கிளிநொச்சியில் அதிகாலை விபத்து! இருவர் பலி!

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ9 பிரதான வீதியின் பரந்தன் பகுதியில் இன்று (29) அதிகாலை இடம்பெற்ற...