Home தென்னிலங்கைச் செய்திகள் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் ரணில்!
தென்னிலங்கைச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் ரணில்!

Share
Share

கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பின்னர் சிறைச்சாலை வைத்தியசாலையில் இருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அங்கு அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை அளவு மற்றும் மிகுந்த சோர்வு காரணமாக ரணில் விக்கிரமசிங்க அதிதீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ரணில் விக்கிரமசிங்க கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நேற்றுப் பிற்பகல் அனுமதிக்கப்பட்டார்.

அவரது நோய் நிலையைப் பரிசோதித்த சிறைச்சாலை வைத்தியர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றுமாறு பரிந்துரைத்தனர்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து 26 ஆம்
திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ரணில் விக்கிரமசிங்க, நேற்று முன்தினம் இரவு சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார உயர் இரத்த அழுத்தம் மற்றும் அதிக சர்க்கரை அளவு காரணமாக முன்னாள்ஜனாதிபதியை சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு வைத்தியர்கள் முன்னர் பரிந்துரைத்திருந்தமை
குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

கிளிநொச்சியில் அதிகாலை விபத்து! இருவர் பலி!

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ9 பிரதான வீதியின் பரந்தன் பகுதியில் இன்று (29) அதிகாலை இடம்பெற்ற...

ராஜிதவுக்கு விளக்கமறியல்!

கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தாக்கல் செய்த மற்றொரு வழக்கு தொடர்பாக இன்று கொழும்பு...

மயிலிட்டியில் நிற்கும் 62 இந்தியப் படகுகளும் அள்ளிச் சென்று அச்சுவேலியில் கொட்டப்படும்!

அத்துமீறி இலங்கைக் கடற்பரப்புக்குள் நுழைந்த குற்றச்சாட்டில் அரசுடைமையாக்கப்பட்டு மயிலிட்டித் துறைமுகத்தில் தரித்து நிற்கும் 62 இந்தியப்...

போக்குவரத்து சபை சாரதிகளுக்கு எச்சரிக்கை!

அனைத்து போக்குவரத்து சபை சாரதிகளும் பணிக்கு திரும்ப வேண்டும். அவ்வாறு செய்யத் தவறின் அவர்களை இடைநிறுத்த...