Home தாயகச் செய்திகள் மாங்குளத்தில் வயோதிபப் பெண் வெட்டிப் படுகொலை!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

மாங்குளத்தில் வயோதிபப் பெண் வெட்டிப் படுகொலை!

Share
Share

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பாலைப்பாணி
கிராமத்தில் தனிமையில் வசித்து வந்த வயோதிபப் பெண் ஒருவர் வீட்டில் வெட்டு காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

70 வயதான மூதாட்டி வீட்டில் சடலமாக கிடப்பதாக கிராமத்தவர்களால் நேற்றுமுன்தினம் மாலை மாங்குளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

இந்நிலையில் சம்பவ இடத்துக்கு சென்ற மாங்குளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு நேற்று காலை கிளிநொச்சி தடயவியல் பொலிஸார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்தனர்.

மூதாட்டியிடமிருந்து நகை உள்ளிட்ட பொருட்களை திருடுவதற்காக வெட்டி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ள நிலையில், மாங்குளம் பொலி
ஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

எங்கள் கட்சி விவகாரங்களில் தலையிடவேண்டிய அவசியமில்லை – தேசிய மக்கள் சக்திக்க சி.வி.கே அறிவுரை!

சிரேஷ்ட தலைவர்களான சிறீதரன், சுமந்திரன் தொடர்பில் – கட்சியின் உள்வீட்டு விவகாரங்களில் தேசிய மக்கள் சக்தி...

திருமலை விவகாரம்; பிக்குவின் விளக்கமறியல் நீடிப்பு!

திருகோணமலை பிரதான கடற்கரைப் பகுதியில் வைக்கப்பட்ட சர்ச்சைக்குரிய புத்தர் சிலை மற்றும் சட்டவிரோத கட்டுமானங்கள் தொடர்பிலான...

திருமலைச் சிறையில் கஸ்ஸப தேதர் உண்ணாவிரதப் போராட்டம்!

திருகோணமலை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பலாங்கொடை கஸ்ஸப தேரர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார் என்று...

புத்தர் சிலை வைத்த பிக்குகள் 4 பேர் உட்பட்ட 09 பேருக்கு திருமலையில் விளக்கமறியல்!

திருகோணமலை கடற்கரையில் அனுமதி பெறாமல் கட்டடம் அமைத்து அங்கு, புத்தர் சிலையை வைத்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட...