Home தாயகச் செய்திகள் யாழில் திடீரென நிறுத்தப்பட்ட இசை நிகழ்வு!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

யாழில் திடீரென நிறுத்தப்பட்ட இசை நிகழ்வு!

Share
Share

யாழ்ப்பாணத்தில் இன்று சனிக்கிழமை நடைபெறவிருந்த இசை நிகழ்வு தவிர்க்க முடியாத காரணத்தால் பிற்போடப்பட்டுள்ளது என்று ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் இன்று மாலை மாபெரும் இசை நிகழ்வுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

“யாழ் . மண்ணே வணக்கம்” எனும் இசை நிகழ்வில், தென்னிந்திய பிரபல பாடகர்களான மனோ, சைந்தவி, கார்த்திக், தீப்தீ, இசையமைப்பாளர் சிற்பி ஆகியோர் கலந்துகொள்ளவிருந்தனர்

இசை நிகழ்வுக்காகச் சில கலைஞர்கள் தென்னிந்தியாவில் இருந்து யாழ்ப்பாணம் வருகை தந்திருந்த நிலையில், திடீரென இசை நிகழ்வு பிற்போடப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இசை நிகழ்வுக்காக 10 ஆயிரம் ரூபா, 5 ஆயிரம் ரூபா, 3ஆயிரம் ரூபா மற்றும் 1500 ரூபா ஆகிய விலைகளில் நுழைவுச்சீட்டுக்களும் விற்பனை செய்யப்பட்டிருந்தன.

நிகழ்வு தவிர்க்க முடியாத காரணத்தால் பிற்போடப்பட்டுள்ளது என்றும், நிகழ்வு பிறிதொரு தினத்தில் நடத்தப்படும் என்றும், அதற்கான திகதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் ஏற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

கொக்குத்தொடுவாய் பகுதியில் மக்களின் காணிகளை அபகரித்து உப்பளம் அமைக்க முயற்சி! மக்கள் எதிர்ப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் உப்பளத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மீனவர்களும்...

நயினாதீவில் பூசகர் ஒருவர் கொலை!

யாழ்ப்பாணம், நயினாதீவில் இரு ஆலயப் பூசகர்களுக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு வாள்வெட்டில் முடிந்ததில், பூசகர்...

இராணுவத்திடம் ஒப்படைத்தவர்களை கேட்கும் உரிமை உறவுகளுக்கு உண்டு – அமைச்சர் ஹர்ஷன!

யுத்தத்தின் போது இராணுவம் மற்றும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட தமது கணவர், பிள்ளைகள்,சகோதரர்கள் எங்கே என்று கேள்வி...

யுத்தகால இழப்புகளுக்கு இன்னும் நீதி ஏன் வழங்கப்படவில்லை – சிறீதரன் எம்பி கேள்வி!

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது மனிதாபிமான யுத்தம் என்ற பெயரில் 22 நாடுகள் விமானத் தாக்குதல்கள், பல்குழல்...