Home தாயகச் செய்திகள் யாழில் வீடு ஒன்றிலிருந்து பெருமளவு ஆயுதங்கள் மீட்பு!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

யாழில் வீடு ஒன்றிலிருந்து பெருமளவு ஆயுதங்கள் மீட்பு!

Share
Share

யாழ்ப்பாணத்தில் வீடொன்றின் வளவில் இருந்து நேற்று பெருமளவு ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.

கொட்டடிப் பகுதியில் உள்ள வீடொன்றில் மலசல கூடத்துக்கு குழி வெட்டியபோது, சந்தேகத்துக்கு இடமான பொதி காணப்பட்டமையால், அது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.

பொலிஸார் வந்து பொதியைப் பார்வையிட்ட பின்னர், அது தொடர்பில் யாழ்.நீதிவான் நீதிமன்றுக்கு அறிவித்து, அகழ்வுப் பணிக்கு அனுமதி பெற்றனர்.

இந்நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை நீதவான் ஏ.ஏ. ஆனந்தராஜா முன்னிலையில் அகழ்வுப் பணிகள்முன்னெடுக்கப் பட்டு பொதிகள் மீட்கப்பட்டன.

குறித்த பொதிகளில் இருந்து ரி-56 ரக துப்பாக்கிகள் 30 மற்றும் அவற்றுக்குரிய 05ஆயிரம் ரவைகள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த ஆயுதங்கள் பொலிஸாரின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

இலங்கை அழைத்தே தாக்கி அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் வந்தது!

இலங்கைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலால் அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் ‘டேனா’ இலங்கையின் அழைப்பின் பேரில்...

கொக்குத்தொடுவாய் பகுதியில் மக்களின் காணிகளை அபகரித்து உப்பளம் அமைக்க முயற்சி! மக்கள் எதிர்ப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் உப்பளத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மீனவர்களும்...

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீது 03 குற்றச்சாட்டுக்கள்!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள்...

நயினாதீவில் பூசகர் ஒருவர் கொலை!

யாழ்ப்பாணம், நயினாதீவில் இரு ஆலயப் பூசகர்களுக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு வாள்வெட்டில் முடிந்ததில், பூசகர்...