ஜனாதிபதி சிறப்புரிமைகள் (நீக்குதல்) சட்டமூலம் தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்ட, மூன்று மனுக்களின் பிரதிகள் தனக்குக் கிடைத்துள்ளதாக சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன அறிவித்துள்ளார்.
ஜனாதிபதி சிறப்புரிமைகள் (நீக்குதல்) சட்டமூலம் தொடர்பாக, அரசியலமைப்பின் 121 (1) வது பிரிவின் கீழ் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேலும் மூன்று மனுக்களின் பிரதிகள் தனக்குக் கிடைத்துள்ளதாக, சபாநாயகர் இன்று (21) நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் அனுபவித்து வரும் சிறப்புச் சலுகைகளை ரத்து செய்வதற்காக, 1986 ஆம் ஆண்டின் 4 ஆம் எண் ஜனாதிபதி உரிமைச் சட்டத்தை ரத்து செய்வதற்கான தொடர்புடைய சட்டமூலம் அண்மையில் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.
Leave a comment