கைரேகை வருகை முறை மற்றும் மேலதிக நேரக் கொடுப்பனவு தொடர்பான முடிவுகளை அஞ்சல் தொழிற்சங்கங்கள் ஏற்றுக்கொண்டால், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசாங்கம் தயாராக உள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
19 கோரிக்கைகளை முன்வைத்து 18,000க்கும் மேற்பட்ட அஞ்சல் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் பங்கேற்கின்றனர்.
இதன் விளைவாகத் அஞ்சல் நிலையங்களில் 1.5 மில்லியனுக்கும் அதிகமான கடிதங்கள் மற்றும் ஆவணங்கள் தேக்கமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a comment