Home தாயகச் செய்திகள் சம்மாந்துறையில் கைக்குண்டு மீட்பு!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

சம்மாந்துறையில் கைக்குண்டு மீட்பு!

Share
Share

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மல்வத்தைப் பகுதியில் அம்பாறை – கல்முனை பிரதான வீதிக்கு அருகில் உள்ள குட்டை ஒன்றில் இருந்து வெடிக்காத நிலையில் கைக்குண்டு ஒன்று இன்று முற்பகல் மீட்கப்பட்டுள்ளது.

மீன் பிடிக்கக் குட்டைகளை இறைத்த சிறுவர்கள் வெடிக்காத நிலையில் இருந்த கைக்குண்டைக் கண்டுபிடித்தனர்.

அவர்கள், 119 எனும் பொலிஸ் அவசரப் பிரிவுக்கு தகவல் வழங்கியதைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்த சம்மாந்துறை பொலிஸார் கைக்குண்டைப் பார்வையிட்டனர்.

குண்டு செயலிழக்கும் விசேட அதிரடிப் படையினர் மற்றும் குற்றவியல் தடயவியல் பொலிஸாரை சம்பவ இடத்துக்கு வரவழைத்த சம்மாந்துறை பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

மீண்டும் தேர்தலில் களமிறங்குவேன் என்கிறார் சஜித்!

மீண்டுமொரு ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறுமாயின் அப்போதும், தாமே ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்கப் போவதாக எதிர்க்கட்சித் தலைவர்...

குற்றச் செயல்களுக்கு முடிவு கட்ட புதிய சட்டம் கட்டாயம் வேண்டும் – பொலிஸ்மா அதிபர் பிரியந்த வலியுறுத்து!

“குற்றச் செயல்களை முழுமையாகக் கட்டுப்படுத்துவதற்குப் புதிய சட்ட ஏற்பாடுகள் மிகவும் அவசியம்.” – இவ்வாறு புதிய...

மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் மரணம்!

யாழ்ப்பாணம், ஆறுகால்மடம் பகுதியில் நேற்று மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சங்கரத்தை – துணவி...

உலக முயற்சியாளர் தினத்தையொட்டி வவுனியாவில் விழிப்புணர்வுப் பேரணி

உலக முயற்சியாளர் தினத்தை முன்னிட்டு வவுனியா பல்கலைக்கழகத்தின் முயற்சியாண்மை கற்கைகள் பிரிவின் மாணவர்கள் இணைந்து இன்று...