Home தாயகச் செய்திகள் ஆசாத் மௌலானாவை இலங்கைக்கு அழைத்துவரப்பட நடவடிக்கை!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

ஆசாத் மௌலானாவை இலங்கைக்கு அழைத்துவரப்பட நடவடிக்கை!

Share
Share

2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் குறித்த சனல் 4 ஆவணப்படத்தில் இடம்பெற்ற முக்கிய நபரான ஆசாத் மௌலானாவை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள்
தற்போது நடைபெற்று வருவதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

ஊடகங்களுக்கு பேட்டியளித்த அவர்-இதுபோன்ற ஒரு முக்கியமான கட்டத்தில்,
எதிர்க்கட்சிகள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகரவுக்கு எதிராக பாராளுமன்ற
சபாநாயகரிடம் நம்பிக்கையில்லா தீர்மானத்தை சமர்ப்பித்திருப்பதை விமர்சித்தார்.

‘ஆசாத் மௌலானாவை இலங்கைக்கு அழைத்து வருவதற்கு நாங்கள் அதிகாரபூர்வ வழிகள் மூலம் பணியாற்றிவரும் நிலையில், இந்த சிறியகுழு சென்று அருண ஜயசே கரவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை தாக்கல் செய்கிறது.

சபாநாயகர் உத்தரவு பிறப்பித்தவுடன், அதை நாங்கள் பகிரங்கப்படுத்து வோம் – அதில் எந்தப் பிரச்னையும் இல்லை.

ஆனால் நான் சொல்ல வேண்டும், அரசியலை இவ்வளவு கீழ் மட்டத்துக்கு இழுக்கக்கூடாது.

நேர்மையாகச் சொன்னால், எதிர்க்கட்சி இன்னும் இவ்வளவு குறுகிய மனப்பான்மையுடன்
செயல்படுவதால் நாங்கள் கலக்கமடைகிறோம், ‘என்று அமைச்சர் ரத்நாயக்க மேலும் கூறினார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களின் போதும் அதற்குப் பின்னரும் ஆட்சியில் இருந்த ரணில்
விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாஸ மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோர் அப்போது அருண ஜயசேகர மீது எந்த விசாரணையும் நடத்தவில்லை என்று அவர் மேலும்
சுட்டிக்காட்டினார்.

‘கடந்த 06 ஆண்டுகளில், அருண ஜயசேகர மீது எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை. இது இரண்டு அரசாங்கங்களின் ஆட்சிக் காலத்தில். நாங்கள் ரவி செனவிரத்ன மற்றும் ஷானி அபேசேகரவை மீண்டும் பணியில் அமர்த்திய பிறகு, அசாத் மௌலானாவுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொண்ட பிறகு, எதிர்க்கட்சி நம்பிக்கையில்லா தீர்மானத்தை
சமர்ப்பிக்கிறது,’ என்று அவர்கூறினார்.

ஈஸ்டர் தாக்குதலுக்குப் பிறகு அருண ஜயசேகரவுக்கு எதிராக விசாரணை நடத்தத் தவறியதற்காக சஜித் பிரேமதாஸ மற்றும் ரணில் விக்கிரமசிங்க மீது இப்போது விசாரணை நடத்தப்படவேண்டும் என்று அமைச்சர் ரத்நாயக்க கூறினார்

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

இலங்கை அழைத்தே தாக்கி அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் வந்தது!

இலங்கைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலால் அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் ‘டேனா’ இலங்கையின் அழைப்பின் பேரில்...

கொக்குத்தொடுவாய் பகுதியில் மக்களின் காணிகளை அபகரித்து உப்பளம் அமைக்க முயற்சி! மக்கள் எதிர்ப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் உப்பளத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மீனவர்களும்...

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீது 03 குற்றச்சாட்டுக்கள்!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள்...

நயினாதீவில் பூசகர் ஒருவர் கொலை!

யாழ்ப்பாணம், நயினாதீவில் இரு ஆலயப் பூசகர்களுக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு வாள்வெட்டில் முடிந்ததில், பூசகர்...