Home தென்னிலங்கைச் செய்திகள் ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை பாதுகாக்க எதிரணி முயற்சி – அநுர அரசு குற்றச்சாட்டு!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை பாதுகாக்க எதிரணி முயற்சி – அநுர அரசு குற்றச்சாட்டு!

Share
Share

“உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலுடன் தொடர்புடைய விசாரணைகளை இருட்டடிப்புச் செய்து, பிரதான சூத்திரதாரியைப் பாதுகாக்கும் தேவைப்பாடு சஜித் அணிக்கும் உள்ளது என்பதையே பிரதிப் பாதுகாப்பு அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை வெளிப்படுத்துகின்றது.” – என்று அநுர அரசு அறிவித்துள்ளது.

பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அருண ஜயசேகரவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியால் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ ஊடகங்களிடம் தெரிவித்ததாவது:-

“உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் முறையாக இடம்பெற்று வரும் விசாரணையை மூடிமறைக்கும் நோக்கில் எதிரணிகளால் பெரும் சதித்திட்டம் தீட்டப்படுகின்றது. இந்தச் சதிகளில் அரசு சிக்காது.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகள் முறையாக இடம்பெறாத வேளை, அருண ஜயசேகரவின் (தற்போதைய பிரதிப் பாதுகாப்பு அமைச்சர்) பெயர் சஜித் தரப்புக்கு நினைவுக்கு வரவில்லை. நாடாளுமன்றத் தெரிவுக்குழு மற்றும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு என்பவற்றில்கூட இவரின் பெயரைக் குறிப்பிடவில்லை.

தற்போது அவரின் பெயர் திடீரென நினைவுக்கு வந்துள்ளது ஏன்?
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் உரிய வகையில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இந்தநிலையில் அரசுடன் தொடர்புபட்ட ஒருவரை இதனுடன் சஜித் தரப்பு தொடர்புபடுத்த முற்படுவது ஏன்?

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரி மற்றும் உண்மையான குற்றவாளிகளை மூடி மறைக்கும் தேவைப்பாடு எதிரணிக்கு இருப்பது இதன்மூலம் தெரிகின்றது.” – என்றார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

இலங்கை அழைத்தே தாக்கி அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் வந்தது!

இலங்கைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலால் அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் ‘டேனா’ இலங்கையின் அழைப்பின் பேரில்...

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீது 03 குற்றச்சாட்டுக்கள்!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள்...

இராணுவத்திடம் ஒப்படைத்தவர்களை கேட்கும் உரிமை உறவுகளுக்கு உண்டு – அமைச்சர் ஹர்ஷன!

யுத்தத்தின் போது இராணுவம் மற்றும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட தமது கணவர், பிள்ளைகள்,சகோதரர்கள் எங்கே என்று கேள்வி...

வெளிநாடுகளில் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முன்னுரிமை – அரசாங்கம்!

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் விஜித...