Home தாயகச் செய்திகள் 18ஆம் திகதியே ஹர்த்தால்! – மடு, நல்லூர் உற்சவ விசேட தினங்களைக் கருத்தில் கொண்டு திகதியில் மாற்றம் என்கிறார் சுமந்திரன்!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

18ஆம் திகதியே ஹர்த்தால்! – மடு, நல்லூர் உற்சவ விசேட தினங்களைக் கருத்தில் கொண்டு திகதியில் மாற்றம் என்கிறார் சுமந்திரன்!

Share
Share

தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கில் அளவுக்கு மீறிய இராணுவப் பிரசன்னத்தை ஆட்சேபித்தும் முத்தையன்கட்டுக்குளத்தில் தமிழ் இளைஞர் ஒருவர் இராணுவ அடாவடித்தனத்தில் உயிரிழந்தமையைக்  கண்டித்தும் இலங்கைத் தமிழரசுக் கட்சி நடத்துவதாக அறிவித்துள்ள ஹர்த்தால் எதிர்வரும் 15 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெறாது என்றும், அடுத்த திங்கட்கிழமை 18ஆம் திகதியே நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மடு தேவாலய உற்சவம் மற்றும் நல்லூர் உற்சவ விசேட தினங்களைக்  கருத்தில் எடுத்து இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டிருப்பதாகத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

மடு தேவாலய உற்சவத்தை ஒட்டி மன்னார் குரு முதல்வருடனும் ஏனைய குருமாருடனும் சுமந்திரன் இன்று பிற்பகல் மன்னாரில் கலந்துரையாடினார். அதையடுத்து தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானத்துடனும் நல்லூர் உற்சவ தினங்கள் குறித்தும் கலந்துரையாடிய பின்னர் முன்னர் அறிவித்தபடி எதிர்வரும் வெள்ளிக்கிழமை 15 ஆம் திகதி ஹர்த்தாலை வடக்கு, கிழக்கில் முன்னெடுப்பதில்லை என்றும், எதிர்வரும் 18ஆம் திகதி திங்கட்கிழமை அதை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் சுமந்திரன் மேலும் குறிப்பிட்டார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

சித்துபாத்தி ஸ்கான் ஆய்வு அறிக்கை இன்று நீதிமன்றுக்கு!

யாழ்ப்பாணம், செம்மணி – சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி வளாகத்தில் அண்மையில் முன்னெடுக்கப்பட்ட ஸ்கான் ஆய்வு தொடர்பான...

எம்.வி.சன்சியின் 15 ஆண்டு நிறைவை ஒட்டி பொது அறிவுப் போட்டி!

எம்.வி.சன்சி 15 ஆவது வருட நிறைவினையொட்டி நடாத்தப்படும் பொது அறிவுப்போட்டிக்கான பதிவுகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கனடாவில்...

மன்னாரில் காற்றாலை அமைப்பு ஒரு மாதத்துக்கு இடைநிறுத்தம்!அதன் பின்னர் அது நடக்குமாம்!

மன்னாரில் காற்றாலை மின் உற்பத்திக் கோபுரங்களை அமைக்கும் திட்டத்தை ஒரு மாத காலத்துக்கு இடைநிறுத்தி வைப்பதுடன்,...

மட்டக்களப்பில் நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டம்!

செம்மணி, முல்லைத்தீவு மற்றும் சட்டவிரோத சமூகச்  செயற்பாடுகளுக்கான நீதி கோரும் கவனவீர்ப்புப் போராட்டம் இன்று புதன்கிழமை...