ஓடிக்கொண்டிருந்த ரயிலில் ஏறமுயன்ற யுவதி ஒருவர் கால் ஒன்றை இழந்துள்ளார்.இந்தச் சம்பவம் நேற்று வியாழக்கிழமை காங்கேசன்துறை ரயில் நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் மேலும் அறிய வருபவை வருமாறு,
குறித்த யுவதி ரயிலில் பயணிப்பதற்காக காங்கேசன்துறை ரயில் நிலையத்துக்கு வந்துள்ளார்.
அவர் வந்தபோது ரயில் புறப்பட்டுக் கொண்டிருந்தது. இதையடுத்து அவர் ஓடிக் கொண்டிருந்த ரயிலில் ஏற முயன்றுள்ளார்.
அப்போது, கால் தடுக்கி யுவதி விழுந்துள்ளார். அப்போது ஒரு கால் ரயிலில் சிக்கிக் கொண்டதில் அது துண்டானது. படுகாயமடைந்த யுவதி யாழ். போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
Leave a comment