Home தாயகச் செய்திகள் செம்மணியில் அடையாளம் காணப்பட்ட எலும்புக் கூடுகளின் எண்ணிக்கை 130 ஆக அதிகரிப்பு!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

செம்மணியில் அடையாளம் காணப்பட்ட எலும்புக் கூடுகளின் எண்ணிக்கை 130 ஆக அதிகரிப்பு!

Share
Share

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியில் இன்று இடம்பெற்ற அகழ்வின் போது புதிதாக நான்கு மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

செம்மணி மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வின் 29ஆம் நாள் அகழ்வுப் பணி இன்று இடம்பெற்றது.

இன்றைய அகழ்வின் போது நான்கு மனித என்புத் தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட மனித என்புத் தொகுதிகளில் இன்று 3 முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை 130 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டு இலக்கமிடப்பட்டுள்ளன. மேலும் இதுவரை அடையாளம் காணப்பட்ட  மனித என்புத் தொகுதிகளில் இருந்து 120 மனித என்புத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

யாழ். நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜாவின் கண்காணிப்பில், துறைசார் நிபுணர் பேராசிரியர் ராஜ் சோமதேவாவின் தலைமையில் அகழ்வுப் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

சட்ட மருத்துவ அதிகாரி பிரணவன் செல்லையா தலைமையிலான குழுவினர், யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவபீட மற்றும் கலைப்பீட தொல்லியல் துறை மாணவர்கள் ஆகியோர் இன்றைய அகழ்வுப் பணிகளின் போது முன்னிலையாகி இருந்தனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

சுருட்டுக்கு பற்றவைத்த தீ யாழில் 95 வயது முதியவரை பலியெடுத்தது!

தவறுதலாக உடையில் தீ பற்றியதால் முதியவர் ஒருவர் நேற்றுமுன்தினம்உயிரிழந்தார். பட்டினசபை வீதி, மானிப்பாய் பகுதியை சேர்ந்த...

முதலமைச்சருக்கு போட்டியிட விரும்புகிறேன் என்கிறார் சுமந்திரன்!

வடக்கு மாகாண சபை தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட விரும்புகிறேன் என்று இலங்கை தமிழ் அரசு...

கூரிய வாள்கள், ஐஸ் போதைப்பொருள்களுடன் வீட்டில் தங்கியிருந்த 19 பேர் மூதூர் பொலிஸாரால் கைது!

சந்தேகத்துக்கிடமான முறையில் வீடொன்றில் தங்கியிருந்த 19 பேர் மூதூர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து...

பலத்த பாதுகாப்புடன் நல்லூர் கந்தனை வழிபட்ட பிரதமர்! (படங்கள்)

யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்துள்ள பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று ஞாயிற்றுக்கிழமை நல்லூர் ஆலயத்தில் வழிபாட்டில்...