யாழ். சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சபாபதிப்பிள்ளை வீதியில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
தனியாகச் சென்ற ஒருவர் மீது ஓட்டோவில் வந்த மூவர் அடங்கிய குழுவினர் இந்த வாள்வெட்டுத் தாக்குதலை நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.
படுகாயமடைந்த நபர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
இது தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Leave a comment