Home தாயகச் செய்திகள் செம்மணியில் விபத்தில் சிக்கிய முதியவர் மரணம்!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

செம்மணியில் விபத்தில் சிக்கிய முதியவர் மரணம்!

Share
Share

யாழ். செம்மணி மயானத்திற்கு அண்மையில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த நபர் வியாழக்கிழமை (31) உயிரிழந்துள்ளார். மீசாலை கிழக்கு மீசாலை பகுதியை சேர்ந்த கோபாலகிருஷ்ணசாமி லிங்கேஸ்வரன் (வயது 62) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

இவர் கடந்த 28ஆம் திகதி மோட்டார் சைக்கிளில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு வந்துகொண்டிருந்தார்.

இதன்போது செம்மணி மயானத்திற்கு அருகாமையில் வீதியால் சென்ற துவிச்சக்கர வண்டியை முந்துவதற்கு முயற்சித்தவேளை துவிச்சக்கர வண்டியுடன் மோதி விபத்து சம்பவித்துள்ளது.

இந்நிலையில் படுகாயமடைந்த இருவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்ப்பிக்கப்பட்டனர். துவிச்சக்கர வண்டியில் சென்றவர் சிகிச்சையின் பின்னர் வீடு திரும்பியுள்ளார். இருப்பினும் குறித்த நபர் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை (31) இரவு உயிரிழந்தார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

புதிய கல்விச் சீர்திருத்தத்தை கூட்டாக நிறைவேற்றவேண்டும் – பிரதமர் ஹரிணி யாழில் கோரிக்கை!

புதிய கல்வி சீர்திருத்தம் கல்வி அமைச்சின் அல்லது ஜனாதிபதி அநுரவின் அல்லது பிரதமர் ஹரிணியின் சீர்திருத்தம்...

செம்மணியில் சான்றுப் பொருட்களை காணொளி, ஒளிப்படம் எடுக்கத் தடை!

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வில் கண்டெடுக்கப்பட்ட ஆடைகள் உள்ளிட்ட பிற சான்றுப்பொருட்களைப் பொதுமக்கள் அடையாளம் காணும்...

தென்னிலங்கையில் ஒருவர் சுட்டுக்கொலை!

தென்னிலங்கையில் இன்று பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் அம்பாந்தோட்டை மாவட்டம்,...

சமஷ்டியை வலியுறுத்தி வெருகலில் கவனவீர்ப்பு!

இணைந்த வடக்கு – கிழக்கு மாகாணத்துக்கு மீளப் பெற முடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வை...