இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு நாளை மறுதினம் 04 ஆம் திகதி யாழ்ப்பாணம் அரியாலை சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி பிரதேசத்தை பார்வையிடுவதற்கு தீர்மானித்துள்ளது.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மூன்று ஆணையாளர்கள் மற்றும் இரண்டு பணிப்பாளர்களுடன் யாழ்ப்பாண பிராந்திய அலுவலர்கள் அடங்கிய குழுவினர் குறித்த பிரதேசத்துக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த குழுவினர் அரியாலை மனிதப் புதைகுழி அகழ்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள தரப்பினருடனும் கலந்துரையாடல்களை மேற் கொள்ளவுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் காணாமற்போனோர் அலுவலக அதிகாரிகளுடனும் மனித உரிமைகளுக்கும் அபிவிருத்திகளுக்குமான நிலையத்தின் பிரதிநிதிகளுடனும் சந்திப்புகளை மேற்கொள்ளவுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Leave a comment