புதிய ஜனநாயக முன்னணியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மருமகனான தனுஷ்க வீரக்கொடியைப் பிணையில் விடுதலை செய்யுமாறு மத்துகம நீதிவான் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ரோஹித அபேகுணவர்தனவின் மருமகனான தனுஷ்க வீரக்கொடி இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட வாகன உதிரிப்பாகங்களைப் பொருத்திய வாகனம் ஒன்றைச் சட்டவிரோதமாகப் பதிவு செய்தமை தொடர்பான விசாரணைகளுக்காக ரோஹித அபேகுணவர்தனவின் மருமகனான தனுஷ்க வீரக்கொடி என்பவர் ஜூலை மாதம் 24ஆம் திகதி காலை மத்துகம நீதிவான் நீதிமன்றத்தில் சரணடைந்ததையடுத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Leave a comment