Home தென்னிலங்கைச் செய்திகள் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம் இரத்து?
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம் இரத்து?

Share
Share

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதிய கொடுப்பனவை இரத்துச் செய்வது தொடர்பான சட்டவரைவினை பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சு அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கவுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதிய கொடுப்பனவை இரத்துச் செய்வதற்காக சட்டவரைஞர் திணைக்களத்தால் தயாரிக்கப்பட்ட சட்ட வரைவு நீதியமைச்சினால் பரிசீலிக்கப்பட்டுள்ள நிலையில் இறுதி மீளாய்வுக்காக சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்கள் ஓய்வூதிய கொடுப்பனவை இரத்துச் செய்வதாக தேசிய மக்கள் சக்தி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டிருந்தது.இதற்கமைய சட்டவரைஞர் திணைக்களத்தால் தயாரிக்கப்பட்ட சட்டவரைவினை பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சு எதிர்வரும் வாரம் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டது.

குறித்த சட்டவரைவுக்கு அமைச்சரவை அங்கீகாரமளித்ததன் பின்னர் வர்த்தமானி அறிவித்தலில் சட்டமூலம் பிரசுரிக்கப்படும்.அதன் பின்னர் சட்டமூலத்தை உயர்நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்த 14 நாட்கள் காலவகாசம் வழங்கப்படும்

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

சட்டமூலம் நிறைவேறியதும் உத்தியோகபூர்வத்திலிருந்து மஹிந்த வெளியேறுவார் – நாமல் தெரிவிப்பு!

முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை இரத்துச் செய்யும் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டவுடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரச...

செம்மணி புதைகுழி விவகாரத்தை இராணுவத்தினர் மீது சுமத்த முயற்சி – சரத் வீரசேகர கவலை!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கூட்டத்தொடர் எதிர்வரும் மாதம் இடம்பெறவுள்ள நிலையில் இலங்கைக்கு அழுத்தம் பிரயோகிக்கும்...

ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவின் பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஏழு பேர் பணி இடைநிறுத்தம்!

ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள்ஏழு பேர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர். ஜனாதிபதி அநுரகுமார...

சந்திரசேன பிணையில் விடுவிப்பு

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேனவைப் பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு பிரதான நீதிவான்...