கற்றல் நடவடிக்கைகளிலிருந்து கடந்த மூன்று வருடங்களில் மாணவர்கள் 20 ஆயிரம் பேர் இடைவிலகினர் என்று கல்வி, உயர்கல்வி அமைச்சரும் பிரதமருமான ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
புதிய கல்வி மறுசீரமைப்பு யோசனைகள் தொடர்பில் அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்தும் கூட்டம் ஒன்று குருநாகலில் நடைபெற்றது.
இதில், கருத்து வெளியிட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
மேலும், நாளாந்தம் பாடசாலை நேரத்தில் 50 வீத மாணவர்களே வகுப்பறையில் இருக்கின்றனர். அடுத்த வருடத்தில் தரம் ஒன்றுக்கும் தரம் 6 இற்கும் புதிய பாட விதானங்களை அறிமுகப் படுத்தப்படும். இதன்மூலம் புதிய இலக்கங்களை அறிமுகப்படுத்த எதிர் பார்க்கப்படுகிறது என்றும் அவர் கூறினார்.
Leave a comment