இசை நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர்
பாம்பு தீண்டி உயிரிழந்தார்.
புத்தூர் மேற்கில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த செல்வச்சந்திரன் மிரோஜன் (வயது 27) என்பவரே உயிரிழந்தார்.
குறித்த இளைஞர், அயலிலுள்ள ஆலயத்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியை பார்ப்பதற்காக நேற்று முன்தினம் இரவு சென்றிருந்தார். அவர் வீடு திரும்பாத நிலையில் நேற்று அதிகாலை 5 மணியளவில் மகனைத் தேடி தாயார் சென்றுள்ளார்.
வீட்டுக்கு வரும் ஒழுங்கையில் மகன் விழுந்த நிலையில் கிடப்பதைக் கண்டார். இதையடுத்து, உறவினர்கள் இளைஞரை அச்சுவேலி பிரதேச மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இளைஞர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என்று தெரிவித்தனர். சடலம் உடல்கூராய்வுக்காக யாழ்.போதனா மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டது.
இதன்போது, அவர் பாம்பு தீண்டி உயிரிழந்தார் என்று உடற்கூராய்வு பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ந.பிறேம்குமார் மேற்கொண்டார்.
Leave a comment