Home தாயகச் செய்திகள் கொள்ளையர் சங்கிலியை அறுத்தபோது படுகாயமுற்ற வயோதிப மாது உயிரிழப்பு – மட்டு நகர் நல்லையா வீதியில் சம்பவம்!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

கொள்ளையர் சங்கிலியை அறுத்தபோது படுகாயமுற்ற வயோதிப மாது உயிரிழப்பு – மட்டு நகர் நல்லையா வீதியில் சம்பவம்!

Share
Share

மட்டக்களப்பு நகரில் வீட்டின் முன் வீதியைத் துப்பரவு செய்து கொண்டிருந்த வயோதிப பெண் ஒருவரின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை அறுத்தெடுத்து அவரை வீதியில் தள்ளி வீழ்த்திவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்ற சம்பவத்தில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட வயோதிபப் பெண் சிகிச்சை பலனின்றி இன்று புதன்கிழமை உயிரிழந்துள்ளார் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு நகர், நல்லையா வீதியைச் சேர்ந்த 81 வயதுடைய மகேஸ்வரி சரவணமுத்து என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
 
கடந்த 24 ஆம் திகதி காலை 6.30 மணிக்கு இந்த வயோதிபப் பெண் தனது வீட்டின் முன்னாள் உள்ள வீதியை துப்பரவு செய்யும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். இந்தநிலையில் அங்கு மோட்டார் சைக்கிள் ஒன்றில் வந்த இருவர் பெண்ணின் கழுத்தில் இருந்த சுமார் 3 இலட்சம் ரூபா பெறுமதியான தங்கச் சங்கிலியை அறுத்தெடுத்துக்  கொண்டு அவரை வீதியில் தள்ளி வீழ்த்தி விட்டுத் தப்பி ஓடியுள்ளனர்.

இதனையடுத்து வீதியில் வீழந்தவர் படுகாயமடைந்த நிலையில் மட்டு. போதனா வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி இன்று காலையில் அவர் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவத்தையடுத்து மட்டக்களப்பு நீதிவான் இந்தச் சம்பவம் இடம்பெற்ற பகுதிக்குச் சென்று விசாரணை செய்தார். சடலம் வைக்கப்பட்டிருக்கும் மட்டு. போதனா வைத்தியசாலைக்குச் சென்று சடலத்தைப் பார்வையிட்டமையுடன் பிரேத பரிசோதனைக்கும் உத்தரவிட்டார்.

இதேவேளை இந்தக் கொள்ளையர்களை வலைவிரித்துத் தேடி வருவதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

சம்பூரில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட இடம் “மயான பூமி” அல்ல!

கிழக்கு மாகாணத்தில் அரசாங்கப் படைகளால் கொல்லப்பட்ட தமிழர்களை நினைவுகூரும் வகையில் அமைக்கப்பட்ட நினைவுச்சின்னத்திற்கு அருகில் மனித...

மாலைதீவு செல்லும் இலங்கையர்களுக்கு இலவச சுற்றுலா விஸா!

சுற்றுலா நோக்கங்களுக்காக மாலைதீவு செல்லும் இலங்கை பிரஜைகளுக்கு 90 நாள் இலவச சுற்றுலா விஸாக்களை வழங்க...

இலங்கைக்கு 20 சதவீதம் வரி; அமெரிக்கா அறிவிப்பு!

இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரிகளை 20 சதவீதமாகக் குறைப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.  இந்த வரி...

செம்மணியில் இதுவரை 118 என்புத் தொகுதிகள் அடையாளம்!

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் இன்று முன்னெடுக்கப்பட்டபோது புதிதாக மூன்று மனித எலும்புத் தொகுதிகள்...