Home தென்னிலங்கைச் செய்திகள் எந்தத் தடை வரினும் ஈஸ்டர் தாக்குதலுக்கு நீதி நிலைநாட்டப்படும் – பிரதமர் ஹரிணி உறுதி!
தென்னிலங்கைச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

எந்தத் தடை வரினும் ஈஸ்டர் தாக்குதலுக்கு நீதி நிலைநாட்டப்படும் – பிரதமர் ஹரிணி உறுதி!

Share
Share

“உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் எதுவும் மறைக்கப்படாது. எந்தத் தடைகள் வந்தாலும் விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும்.” – இவ்வாறு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் குறித்து கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“எம்மால் முன்னெடுக்கப்படும் விசாரணையை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஏற்கின்றனரா? இல்லையா? என்பது எமக்குப் பிரச்சினை இல்லை. ஏற்பதற்கும், நிராகரிப்பதற்கும் அவர்களுக்கு உரிமை உள்ளது.

அந்த உரிமையை நாம் மதிக்கின்றோம். எனினும், உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும். இது தொடர்பில் முன்னெடுக்கப்பட வேண்டிய அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும். எந்தத் தடைகள் வந்தாலும் விசாரணைகள் தொடரும்.” – என்றார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

சிறிதரன் எம்பியின் பதவி பறிக்கப்பட்டு சாணக்கியனிடம் கையளிப்பு!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் பதவியில் இருந்து யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்...

கிவுல் ஓயா திட்டத்துக்கு எதிராக மக்கள் திரண்டு போராட்டம்!

வவுனியா வடக்கில் முன்னெடுக்கப்படவுள்ள கிவுல் ஓயா திட்டத்துக்கு எதிராக நெடுங்கேணியில் இன்று ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இதில்...

வடக்கு மக்களுக்கு அரசாங்கம் வழங்கிய முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை – மனோ கணேசன் குற்றச்சாட்டு!

‘காணி விடுவிப்பு, அரசியல் கைதிகள் விடுதலை, அதிகார பகிர்வு காணாமல் போனோர் பற்றிய பணிமனையின் மேம்பட்ட...

நிபந்தனைகளின்றி இலங்கைக்கு உதவி – இந்தியத் தூதுவர் தெரிவிப்பு!

பொறுப்புணர்வு மற்றும் சிறந்த அயலுறவு கொள்கையின் அடிப்படையில், எந்தவித நிபந்தனைகளுமின்றி இலங்கைக்கான இந்தியாவின் உதவிகள் முன்னெடுக்கப்படுவதாக...