யாழ்.பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி அறிவியல்நகர் வளாகத்தில் பாதுகாப்புக்
கடமையில் இருந்த காவலர் நேற்று திங்கட்கிழமை சடலமாக மீட்கப்பட்டார்.
அறிவியல் நகர் விவசாய பீட வளாகத்தில் பாதுகாப்பு கடமையில் இருந்த தர்மசீலன் ரகுராஜ் (வயது-34 ) என்ற நபரே சடலமாக மீட்கப்பட்டார்.
சடலம் உடல் கூற்று பரிசோதனைக்காக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
குறித்த பாதுகாவலர் விவசாய பீடத்தின் மேல் மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்திருக்கலாம் என்று ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Leave a comment