முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் (ஓய்வுநிலை) நிஷாந்த உலுகேதென்ன குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொத்துஹெர பகுதியில் நபரொருவர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பான விசாரணைக்கமைய, அவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் நேர்ந்ததாக நம்பப்படும் காலப்பகுதியில் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன கடற்படை புலனாய்வு பிரிவின் தலைவராகப் பணியாற்றியிருந்தார்.
அத்துடன், பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் நபர், அவரது கட்டளையின் கீழ் இயங்கியதாக கூறப்படும் இரகசிய முகாமொன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.
Leave a comment