Home தாயகச் செய்திகள் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் ஒருவர் மரணம்; பொலிஸார் இருவர் பணியிடை நிறுத்தம்!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் ஒருவர் மரணம்; பொலிஸார் இருவர் பணியிடை நிறுத்தம்!

Share
Share

கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவர் உயிரை மாய்த்து கொண்டதாக கூறப்படும் சம்பவத்தையடுத்து, குறித்த பொலிஸ் நிலையத்தில் கடமையிலிருந்த பொலிஸார் இருவர் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவத்தின்போது, பொலிஸ் நிலையத்தில் கடமையில் இருந்ததாக கூறப்படும், உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவருமே பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

தாக்குதல் சம்பவமொன்று தொடர்பாக நேற்றுமுன்தினம் கிளிநொச்சி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த 66 வயதுடைய ஒருவர் சிறைக்கூடத்தில் உயிரை மாய்த்துக் கொண்டதாக பொலிஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரினால் முன்னெடுக்கப்பட்ட முதற்கட்ட விசாரணைகளையடுத்து, குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரும் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.


Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

எந்தத் தடை வரினும் ஈஸ்டர் தாக்குதலுக்கு நீதி நிலைநாட்டப்படும் – பிரதமர் ஹரிணி உறுதி!

“உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் எதுவும் மறைக்கப்படாது. எந்தத் தடைகள் வந்தாலும் விசாரணைகள்...

செம்மணியில் மேலும் 03 எலும்புக் கூட்டுத் தொகுதிகள்!

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் நேற்று திங்கட்கிழமை புதிதாக 03...

இரண்டு வாரங்களாக யாழில் மாணவியைக் காணவில்லை!

பாடசாலைக்கு சகோதரனை ஏற்றச் சென்ற மாணவி காணாமல் போயுள்ளதாக தாயார்யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். யாழ்ப்பாணம்,...

மாகாண சபைகள் தேர்தல்களை நடத்துமாறு பவ்ரல் வலியுறுத்தல்!

நீண்ட காலமாக ஒத்திவைக்கப்பட்டுள்ள மாகாண சபைகள் தேர்தல்களை மேலும் தாமதிக்காமல் உடனடியாக நடத்துமாறு சுதந்திரமான மற்றும்...