Home தென்னிலங்கைச் செய்திகள் புதிய அரசமைப்புக்கான வேலைத்திட்டம் ஆரம்பம் – நாடாளுமன்றில் பிரதமர் தெரிவிப்பு !
தென்னிலங்கைச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

புதிய அரசமைப்புக்கான வேலைத்திட்டம் ஆரம்பம் – நாடாளுமன்றில் பிரதமர் தெரிவிப்பு !

Share
Share

“புதிய அரசமைப்புக்கான ஆரம்பகட்ட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. எமது ஆட்சிக் காலத்துக்குள் புதிய அரசமைப்பு திருத்தங்களை மேற்கொள்வோம்.” – இவ்வாறு பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில், புதிய அரசமைப்பு திருத்தம் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே பிரதமர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

“புதிய அரசமைப்பு ஒன்று நாட்டுக்குத் தேவையாகும். அது இந்த நாட்டின் அடிப்படைச் சட்டமாகும். அதனால் அதில் திருத்தம் மேற்கொள்ளும்போது அது தொடர்பில் ஆராயாமல், விசேட நிபுணர்களுடன் கலந்துரையாடாமல், பிரஜைகள் குழுக்களின் கருத்துக்களுக்குச் செவிசாய்க்காமல் குறுகிய காலத்தில் மேற்கொள்வது சாத்தியப்படாத ஒன்றாகும்.

விசேடமாக தற்போது இருக்கும் சில கட்டளைகள், சட்டங்கள், ஒழுங்குவிதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டி இருக்கின்றன. அதனால் எமது அரசு அது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதன் பிரகாரம் புதிய அரசமைப்பு திருத்தம் தொடர்பான ஆரம்பகட்ட வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அரசு புதிய அரசமைப்பு திருத்தம் மேற்கொள்ளும்போது அனைத்து தரப்பினருடன் கலந்துரையாடி, அனைத்து தரப்பினருக்கும் செவிசாய்க்க நடவடிக்கை எடுத்துள்ளது. விசேடமாக மக்கள் மயமான அரசமைப்பாக புதிய அரசமைப்பு திருத்தப்பட வேண்டும் என்பதே எமது அரசின் நோக்கமாகும். அதனால் புதிய அரசமைப்பு திருத்தம் தொடர்பில் சமூக கருத்தாடல் ஒன்றுக்குத் திறந்து விடப்பட வேண்டும். அதேபோன்று நாடாளுமன்றத்தைப்  பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அரசியல் கட்சிகள் மற்றும் பிரதிநிதித்துவப்படுத்தாத ஏனைய அரசியல் கட்சிகளின் கருத்துக்களுக்கும் செவிசாய்க்கப்படும்.

அதன் பிரகாரம் அரசு வரைவு செய்யும் புதிய அரசமைப்பு சமூகத்தில் அனைத்து தரப்பினரின் கருத்துக்களை மதித்து, வரைவு செய்யப்படுகின்ற, இதுவரை காலமும் உருவாகாத மக்கள் மயமான அரசமைப்பாக அமையும்.

அத்துடன் நாட்டின் பிரதான சட்டமான அரசமைப்பு அடிக்கடி திருத்தப்படக்கூடாது என்பதால், விசேட நிபுணர்களின் கருத்துக்களைக் கேட்டு, ஆழமாக ஆராய்ந்து தயாரிப்பதே எமது அரசின் நோக்கமாகும். அதனால் இதற்காகச் சில காலம் தேவைப்படும். எமது கொள்கைப்  பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள பிரகாரம் அந்த நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.

எமது அரசு ஆட்சிக்கு வந்து இன்னும் ஒரு வருடம் செல்லவும் இல்லை. இன்னும் எங்களுக்கு 4 வருடங்கள் இருக்கின்றன. அதனால் இது தொடர்பில் அவசரப்படத் தேவையில்லை. எமது ஆட்சிக் காலத்துக்குள் புதிய அரசமைப்பு திருத்தங்களை மேற்கொள்வோம்” – என்றார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

செம்மணியில் பொலித்தீன் பை அடையாளம் – எலும்புக் குவியல்கள் இருப்பதாகச் சந்தேகம்!

யாழ். செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழியின் தடயவியல் அகழ்வாய்வுத்...

சூதாட்ட குற்றச்சாட்டில் 13 பெண்கள் உட்பட 16 பேர் கைது!

களுத்துறை – வாத்துவை பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்டனர் எனக் கூறப்படும் 13 பெண்கள் உட்பட 16...

மாகாண சபைத் தேர்தலை உடன் நடத்தி தமிழருக்கு அதிகாரத்தை வழங்குங்கள் – அநுர அரசிடம் சஜித் அணி வலியுறுத்து!

“மாகாண சபை முறைமை என்பது வடக்கு, கிழக்கு மக்களுக்கு வழங்கப்பட்ட வாய்ப்பாகும். எனவே, அந்தத் தேர்தலை...

தமிழின அழிப்புக்கு சர்வதேச நீதி கோரி தமிழர் தாயகத்தில் பெரும் போராட்டம்!

ஈழத் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட இன அழிப்புக்குச் சர்வதேச நீதிப் பொறிமுறை வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழர்...