மாலைதீவு ஜனாதிபதி முகமது முய்சுவின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாளைமறுதினம் திங்கட்கிழமை உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு மாலைதீவுக்குச் செல்லவுள்ளார் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் அவர் மாலைதீவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணமாக இது அமைகின்றது.
1965 ஆம் ஆண்டு ஜூலை 29 ஆம் திகதி இரு நாடுகளுக்கும் இராஜதந்திர உறவுகளை ஆரம்பித்து 60 ஆவது ஆண்டு நிறைவை இந்த ஆண்டு கொண்டாடுவதால், இந்த உத்தியோகபூர்வ விஜயம் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.
இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்துதல், வர்த்தகம் மற்றும் பிராந்திய ஒத்துழைப்பு தொடர்பில் இரு நாட்டு தலைவர்களும் கலந்துரையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மாலைதீவு – இலங்கைக்கு இடையிலான சுதந்திர வர்த்தக வலயத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட ஒப்பந்த பேச்சுவார்தையும் நடத்தப்படவுள்ளது.
Leave a comment