மனிதப் புதைகுழி காணப்படும் செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்துக்குள் அத்துமீறி உள்நுழைந்து புகைப்படம் எடுத்த மதகுரு தலைமையிலான குழுவினரால் சர்ச்சை ஏற்பட்டது.
மனிதப் புதைகுழி காணப்படுவதாக நீதிமன்றத்தால் அடையாளம் காணப்பட்டு அகழ்வுப் பணி இடம்பெறும் இடத்துக்கு நேற்று கத்தோலிக்க மதகுருவின் சிபார்சுடன் கூடிய கடிதம் ஒன்றுடன் உள்நுழைந்து புகைப்படம் எடுத்தவர்களைப் பொலிஸார் அங்கிருந்து வெளியேற்றினர்.
இவ்வாறு வெளியேற்றப்பட்டவர்கள், அகழ்வுப் பணி இடம்பெறும் இடத்தில் அனுமதியின்றி எடுத்த நிழல் படங்களும் பொலிஸாரால் அழிக்கப்பட்டன.
Leave a comment