Home தாயகச் செய்திகள் பாலூட்டும் போத்தல் அடையாளம் கண்ட பகுதியில்குழந்தையின் எலும்புத் தொகுதி ஒன்று அகழ்ந்தெடுப்பு!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்முதன்மைச் செய்திகள்

பாலூட்டும் போத்தல் அடையாளம் கண்ட பகுதியில்குழந்தையின் எலும்புத் தொகுதி ஒன்று அகழ்ந்தெடுப்பு!

Share
Share

யாழ். செம்மணி மனிதப் புதைகுழியிள் இருந்து குழந்தைகளுக்குப் பாலூட்டும் போத்தல் அடையாளம் காணப்பட்ட பகுதியில் குழந்தையின் எலும்புத் தொகுதி ஒன்றும் இன்று அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழிக்கு அருகில் மேலும் புதைகுழிகள் இருக்கலாம் எனச் செய்மதிப் படங்கள் மூலம் சில பகுதிகள் சந்தேகத்தின் அடிப்படையில் அடையாளப்படுத்தப்பட்டு தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவாவினால் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

அந்தப் பகுதி தடயவியல் அகழ்வாய்வுத் தளம் இரண்டு என நீதிமன்றத்தால் பிரகடனப்படுத்தப்பட்டு அகழ்வுப் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 17ஆம் நாள் அகழ்வுப் பணிகள் இடம்பெற்றபோது குழந்தைகளுக்குப் பாலூட்டும் போத்தல் ஒன்றும், வெள்ளை நிற ஆடை ஒன்றும் அடையாளம் காணப்பட்டிருந்தன.

இந்நிலையில், அந்தப் பகுதியில் இருந்து குழந்தையின் எலும்புத் தொகுதி ஒன்று அடையாளம் காணப்பட்டு இன்று அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

இலங்கை அழைத்தே தாக்கி அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் வந்தது!

இலங்கைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலால் அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் ‘டேனா’ இலங்கையின் அழைப்பின் பேரில்...

கொக்குத்தொடுவாய் பகுதியில் மக்களின் காணிகளை அபகரித்து உப்பளம் அமைக்க முயற்சி! மக்கள் எதிர்ப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் உப்பளத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மீனவர்களும்...

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீது 03 குற்றச்சாட்டுக்கள்!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள்...

நயினாதீவில் பூசகர் ஒருவர் கொலை!

யாழ்ப்பாணம், நயினாதீவில் இரு ஆலயப் பூசகர்களுக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு வாள்வெட்டில் முடிந்ததில், பூசகர்...