Home தாயகச் செய்திகள் கறுப்பு ஜூலை படுகொலை நினைவேந்தல் தாயகத்தில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு! தமிழருக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் பற்றி யாழ். பல்கலைக்கழகத்தில் நினைவுரை!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

கறுப்பு ஜூலை படுகொலை நினைவேந்தல் தாயகத்தில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு! தமிழருக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் பற்றி யாழ். பல்கலைக்கழகத்தில் நினைவுரை!

Share
Share

இலங்கை அரசால் தமிழ் மக்கள் மீது திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட கறுப்பு ஜூலை படுகொலையின் 42 ஆம் ஆண்டு நினைவேந்தல் தமிழர் தாயகமான வடக்கு – கிழக்கில் இன்று உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

அந்தவகையில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் கறுப்பு ஜூலை நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.

பல்கலைக்கழகத்தின் பிரதான வளாகத்தில் அமைந்துள்ள சுற்றுவட்டத்தில் வைக்கப்பட்ட கறுப்பு ஜூலை நினைவுருவப் படத்துக்கு மாணவர்களால் அகவணக்கம் செலுத்தப்பட்டு மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

இதன்போது 1983 கறுப்பு ஜூலை வாரத்தில் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பான நினைவுரையும் இடம்பெற்றது.

இந்த நினைவேந்தல் நிகழ்வில் பல்கலைக்கழக மாணவர்கள், ஊழியர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

மனிதப் புதைகுழி; எலும்புத் தொகுதிகளின் எண்ணிக்கை 90 ஆக அதிகரிப்பு!

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியில் இன்றைய அகழ்வின் போது இரண்டு மனித எலும்புத் தொகுதிகள் புதிதாக...

பாலூட்டும் போத்தல் அடையாளம் கண்ட பகுதியில்குழந்தையின் எலும்புத் தொகுதி ஒன்று அகழ்ந்தெடுப்பு!

யாழ். செம்மணி மனிதப் புதைகுழியிள் இருந்து குழந்தைகளுக்குப் பாலூட்டும் போத்தல் அடையாளம் காணப்பட்ட பகுதியில் குழந்தையின்...

நல்லூர் கந்தனுக்குச் செவ்வாய் கொடியேற்றம் – ஏற்பாடுகள் மும்முரம்!

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்குக்...

கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்த நபர் சடலமாக மீட்பு!

கிளிநொச்சி பொலிஸ் நிலைய விசாரணைக் கூண்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில்...