Home தென்னிலங்கைச் செய்திகள் இளைஞர்கள் இருவர் வாவியில் மூழ்கி பலி!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

இளைஞர்கள் இருவர் வாவியில் மூழ்கி பலி!

Share
Share

வாவியில் மூழ்கி இளைஞர்கள் இருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். இரத்தினபுரி மாவட்டம், உடவளவையில் உள்ள பனாக்கடுவ வாவியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இளைஞர்கள் இருவரே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

அவர்களில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மற்றைய நபரின் சடலத்தைத் தேடும் நடவடிக்கை தொடர்கின்றது.

29 மற்றும் 30 வயதுடைய இருவரும் பனஹடுவ பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

இருவரும் நீரில் மூழ்கியதை அவதானித்த நபர் ஒருவர் பொலிஸாருக்குத் தகவல் வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து, எம்பிலிப்பிட்டிய பொலிஸார் மற்றும் இலங்கை இராணுவத்தின் உயிர்காக்கும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து தேடுதல் நடவடிக்கையை ஆரம்பித்தனர்.

இதன்போது ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

மற்றைய நபரின் சடலத்தைக் கண்டுபிடிக்கும் தேடுதல் நடவடிக்கை தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

இலங்கை அழைத்தே தாக்கி அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் வந்தது!

இலங்கைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலால் அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் ‘டேனா’ இலங்கையின் அழைப்பின் பேரில்...

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீது 03 குற்றச்சாட்டுக்கள்!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள்...

இராணுவத்திடம் ஒப்படைத்தவர்களை கேட்கும் உரிமை உறவுகளுக்கு உண்டு – அமைச்சர் ஹர்ஷன!

யுத்தத்தின் போது இராணுவம் மற்றும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட தமது கணவர், பிள்ளைகள்,சகோதரர்கள் எங்கே என்று கேள்வி...

வெளிநாடுகளில் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முன்னுரிமை – அரசாங்கம்!

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் விஜித...