Home தாயகச் செய்திகள் உதைப்பந்தாட்டக் கோல் கம்பம் வீழ்ந்து இளைஞர் ஒருவர் பரிதாபகரமாக மரணம் – நாவாந்துறை விளையாட்டுக் கழக மைதானத்தில் துயரம்!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

உதைப்பந்தாட்டக் கோல் கம்பம் வீழ்ந்து இளைஞர் ஒருவர் பரிதாபகரமாக மரணம் – நாவாந்துறை விளையாட்டுக் கழக மைதானத்தில் துயரம்!

Share
Share

யாழ். நாவாந்துறை சென்மேரிஸ் விளையாட்டுக் கழக மைதானத்தில் உதைப்பந்தாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர் ஒருவர் கோல் கம்பம் வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

யுவராஜ் செபஸ்தியாம்பிள்ளை என்ற 29 வயது இளைஞரே இந்தச் சம்பவத்தில் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

இந்தத் துயரச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 3:30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

உதைப்பந்தாட்டம் விளையாடிய இளைஞர் மீது கோல் கம்பம் வீழ்ந்து ஆபத்தான நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். எனினும், அவர் சிகிசை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

இலங்கை அழைத்தே தாக்கி அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் வந்தது!

இலங்கைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலால் அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் ‘டேனா’ இலங்கையின் அழைப்பின் பேரில்...

கொக்குத்தொடுவாய் பகுதியில் மக்களின் காணிகளை அபகரித்து உப்பளம் அமைக்க முயற்சி! மக்கள் எதிர்ப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் உப்பளத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மீனவர்களும்...

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீது 03 குற்றச்சாட்டுக்கள்!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள்...

நயினாதீவில் பூசகர் ஒருவர் கொலை!

யாழ்ப்பாணம், நயினாதீவில் இரு ஆலயப் பூசகர்களுக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு வாள்வெட்டில் முடிந்ததில், பூசகர்...