“இலங்கையில் மின்சாரக் கதிரை கதை கூறி ராஜபக்ஷக்கள் அரசியல் நடத்தியது போல் தமிழக முதலமைச்சர் கச்சதீவு விவகாரத்தைக் கையிலெடுத்துள்ளார். சர்வதேச சட்டத்தின் பிரகாரம் கச்சதீவு இலங்கைக்குக் கிடைக்கப் பெற்றுவிட்டது. அது இலங்கைக்கு உரித்தானது.” இவ்வாறு அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-
“கச்சதீவு விவகாரம் தொடர்பில் தமிழக முதலமைச்சர் வெளியிடும் கருத்துக்கள் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியதில்லை. ஏனெனில் தமிழகத்தில் எழும் பிரச்சினைகளைத் திசைதிருப்புவதற்காக இந்த விவகாரம் பயன்படுத்தப்படலாம்.
தமிழக முதலமைச்சருக்கு மஹிந்த ராஜபக்ஷ போல் மின்சாரக் கதிரையை வைத்து அரசியல் நடத்தும் சூழ்நிலை இல்லை. எனவே, தமிழக முதலமைச்சர் உட்பட தமிழகத் தலைவர்கள் கச்சதீவு விவகாரத்தை அரசியலுக்காகப் பயன்படுத்துகின்றனர்.
சர்வதேச சட்டத்தின் பிரகாரம் கச்சதீவு இலங்கைக்குக் கிடைக்கப் பெற்றுவிட்டது. அது இலங்கைக்கு உரித்தானது.” – என்றார்.
Leave a comment