நாட்டிற்கு வரும் வெளிநாட்டவர்களுக்கு தற்காலிக சாரதி அனுமதிப் பத்திரங்களுக்கான உரிமங்களை வழங்கும் திட்டம், அடுத்த மாதம் விமான நிலையத்தில் ஆரம்பிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில், குறித்த திட்டம் முறையாக செயற்படுத்தப்படுமென, மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க தெரிவித்தார்.
நாட்டிற்கு வருகைதரும் வெளிநாட்டவர்களுக்கு குறைந்தபட்சம் 14 நாட்களுக்கு தற்காலிக ஓட்டுநர் உரிமங்களை வழங்க முடியும்.
இருப்பினும், நாட்டிற்கு செல்லுபடியாகும் தற்காலிக ஓட்டுநர் உரிமங்களை வழங்கும்போது, சம்பந்தப்பட்ட வெளிநாட்டவரின் ஓட்டுநர் உரிமத்தின் செல்லுபடியாகும் காலம் மற்றும் அதில் சேர்க்கப்பட்டுள்ள வாகனங்களின் வகைகள் குறித்து கவனம் செலுத்தப்படும் என மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.
Leave a comment