Home தாயகச் செய்திகள் புதுக்குடியிருப்பில் விபத்து!குடும்பஸ்தர் ஒருவர் பலி! இளைஞர்கள் இருவர் படுகாயம்!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

புதுக்குடியிருப்பில் விபத்து!குடும்பஸ்தர் ஒருவர் பலி! இளைஞர்கள் இருவர் படுகாயம்!

Share
Share

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு – உடையார்கட்டு பிரதான வீதியில் இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானதில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் இரு இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த விபத்தில் ஒரு மோட்டார் சைக்கிளில் பயணித்த குடும்பஸ்தர் ஒருவரும், மற்றைய மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்களும் படுகாயமடைந்த நிலையில் மூங்கிலாறு ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர். அவர்களில் உடையார்கட்டு, வெள்ளப்பள்ளம் பகுதியைச் சேர்ந்த 37 வயதான குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இளைஞர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் அதிக வேகத்துடன் பயணித்தது என்று சம்பவ இடத்தில் இருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

நேற்றுமுன்தினம் மாலை இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பாக புதுக்குடியிருப்புப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

கொக்குத்தொடுவாய் பகுதியில் மக்களின் காணிகளை அபகரித்து உப்பளம் அமைக்க முயற்சி! மக்கள் எதிர்ப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் உப்பளத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மீனவர்களும்...

நயினாதீவில் பூசகர் ஒருவர் கொலை!

யாழ்ப்பாணம், நயினாதீவில் இரு ஆலயப் பூசகர்களுக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு வாள்வெட்டில் முடிந்ததில், பூசகர்...

இராணுவத்திடம் ஒப்படைத்தவர்களை கேட்கும் உரிமை உறவுகளுக்கு உண்டு – அமைச்சர் ஹர்ஷன!

யுத்தத்தின் போது இராணுவம் மற்றும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட தமது கணவர், பிள்ளைகள்,சகோதரர்கள் எங்கே என்று கேள்வி...

யுத்தகால இழப்புகளுக்கு இன்னும் நீதி ஏன் வழங்கப்படவில்லை – சிறீதரன் எம்பி கேள்வி!

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது மனிதாபிமான யுத்தம் என்ற பெயரில் 22 நாடுகள் விமானத் தாக்குதல்கள், பல்குழல்...