இலங்கையில் இருந்து மட்டக்களப்பைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் படகு மூலம் தமிழகத்துக்குச் சென்றபோது இன்று தமிழகப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு, ஏறாவூரைச் சேர்ந்த 28 வயதான ஞானசேகரன் கியோசன் என்பவரே இவ்வாறு படகு மூலம் சென்றுள்ளார்.
படகு மூலம் இலங்கையில் இருந்து தப்பிச் சென்றவர் இந்தியாவின் ஆளுகையில் உள்ள முதலாவது தீடையில் நிற்பதை அவதானித்த தமிழகப் பொலிஸார் படகில் சென்று ஏற்றிச் சென்றுள்ளனர்.
இவ்வாறு தமிழகத்துக்குச் சென்ற மட்டக்களப்பைச் சேர்ந்த இளைஞர் இலங்கையில் ஏதும் குற்றப் பின்னணி கொண்டவரா எனத் தமிழகப் பொலிஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
Leave a comment