Home தென்னிலங்கைச் செய்திகள் மாகாண சபைத் தேர்தல் நடந்தால் என்.பி.பி. அரசு தோல்வியடையும் – சஜித் அணி சொல்கின்றது!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

மாகாண சபைத் தேர்தல் நடந்தால் என்.பி.பி. அரசு தோல்வியடையும் – சஜித் அணி சொல்கின்றது!

Share
Share

இலங்கையில் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டால் ஆளும் கட்சியான தேசிய மக்கள் சக்தி தோல்வியடையும்.” இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.

தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“நாடாளுமன்றத் தேர்தலை விடவும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் வாக்கு வங்கி அதிகரித்துள்ளது. ஏனைய எதிர்க்கட்சிகளின் வாக்கு வங்கியும் அதிகரித்திருப்பதைக் காணமுடிகின்றது.

அடுத்து மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். எனினும், தற்போதைய சூழ்நிலையில் அந்தத் தேர்தலை அரசு நடத்துமா எனத் தெரியவில்லை. அவ்வாறு நடத்தப்பட்டால் அனைத்து மாகாண சபைகளையும் எதிரணிகளே கைப்பற்றும்.

அதேவேளை, இந்த அரசு ஐந்து வருடங்கள் பயணிக்க வேண்டும் என்றே நாம் எதிர்பார்க்கின்றோம். ஆனால், வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாது, மக்கள் ஆணைக்கு முரணாக அரசு செயற்பட்டால் போராட்டங்களில் ஈடுபட்டு, அரசின் ஆயுள் காலத்தைச் சுருக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.” – என்றார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

தேர்தல் ஆணைக்குழுவின் அனைத்து இ – சேவைகளும் இடைநிறுத்தப்படுவதாக அறிவிப்பு!

இலங்கையின் தேர்தல் ஆணைக்குழுவின் அனைத்து இ – சேவைகளும் மறு அறிவித்தல் வரும் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன....

அரச பாடசாலைகளில் நிதி சேகரிப்பதற்கு எதிராக நடவடிக்கை!

நாட்டிலுள்ள அரசாங்க பாடசாலைகளில் இடம்பெறும் பல்வேறு நிகழ்வுக்ள் விளையாட்டு போட்டிகள் மற்றும் உற்சவங்களை நடத்துவதற்காக மாணவர்களிடம்...

கடலில் தத்தளித்த இந்திய மீனவர்களை மீட்டது இலங்கைக் கடற்படை!

சிலாபம் அருகே கடலில் தத்தளித்த நான்கு இந்திய மீனவர்களை இலங்கை கடற்படை வீரர்கள் பத்திரமாக மீட்டுள்ளனர்....

இன்று முதல் தேசிய விபத்து தடுப்பு வாரம்!

நாட்டில் அதிகரித்துவரும் விபத்துகள் தொடர்பில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்குடன் திங்கட்கிழமை (07) முதல் வெள்ளிக்கிழமை...