Home தாயகச் செய்திகள் செம்மணியில் மனிதப் புதைகுழியிலிருந்து வெடிபொருட்கள் மீட்பு!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

செம்மணியில் மனிதப் புதைகுழியிலிருந்து வெடிபொருட்கள் மீட்பு!

Share
Share

யாழ். செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து ஆயுதங்கள் அல்லது வெடிப்பொருள்களைக் கொண்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் சிறிய பரல் ஒன்று குண்டு செயலிழக்கும் பிரவினரால் மீட்கப்பட்டுள்ளது. அது ஏ.கே. அல்லது எல்.எம்.ஜி.ரக இயந்திரத் துப்பாக்கிக்குப் பய்ன்படுத்தப்படும் ட்ரம் மகஸின் (ரவைக் கூடு) எனச் சம்பந்தப்பட்ட தரப்புகளால் அடையாளம் காணப்பட்டது என அறியவந்தது.

ஆயினும் அந்த ட்ரம் மகஸினுக்குள் ரவைகள் நிரப்பப்பட்டிருந்தனவா அல்லது அது வெற்று மகஸினா என்பது தெரியவரவில்லை.

செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகளின் ஒன்பதாம் நாளான நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை மாலையில் புதைகுழியில் இருந்து சந்தேகத்துக்கிடமான பொருள் ஒன்று அடையாளம் காணப்பட்டது. இது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று சனிக்கிழமை அதிகாலை குண்டு செயலிழக்கும் பிரிவினர் வருகை தந்து அந்தச் சந்தேகத்துக்கிடமான பொருளை அகழ்ந்தெடுத்தனர். பின்னர் அது நீதிமன்றக் கட்டுக்காவலில் பொறுப்பேற்கப்பட்டுள்ளது.

ஆய்வின் பிற்பாடு அது தொடர்பான தகவல்கள் உறுதிப்பாடாக வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

சித்துப்பாத்தி மயானம் எங்கும் புதைகுழிகள் – சிரமதானத்தின்போது எலும்பு எச்சங்கள் அடையாளம்!

யாழ்ப்பாணம், செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தில் மனிதப் புதைகுழி அகழ்வு இடம்பெறும் பகுதியைச் சூழ...

இரண்டு கோடி ரூபா பெறுமதியானகேரள கஞ்சா மன்னாரில் சிக்கியது!

இராணுவப் புலனாய்வு அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின்படி மன்னாரில் 2 கோடி ரூபா பெறுமதியான கேரள...

மேலும் ஐந்து எலும்புத் தொகுதிகள் மீட்பு!

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியிள் இன்றைய அகழ்வின் போது 5 எலும்புத் தொகுதிகள் புதிதாக அடையாளம்...

தேர்தல் ஆணைக்குழுவின் அனைத்து இ – சேவைகளும் இடைநிறுத்தப்படுவதாக அறிவிப்பு!

இலங்கையின் தேர்தல் ஆணைக்குழுவின் அனைத்து இ – சேவைகளும் மறு அறிவித்தல் வரும் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன....