உயர் பதவியில் உள்ளவர்களின் 488 கோப்புக்கள் தொடர்பான விசாரணைளை இலஞ்ச ஒழிப்புத்துறை தொடங்கியுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக நேற்று சனிக்கிழமை வெளியான அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
உயர் பதவியில் உள்ள அரசியல்வாதிகள் மற்றும் முன்னாள் மூத்த அரச அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்ளும் நபர்கள் தொடர்பான
488 கோப்புக்கள் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைகளை தொடங்கியுள்ளது.
இந்த முறைப்பாடுகள் ஜனாதிபதி செயலகம், பல்வேறு அமைச்சுகள் மற்றும் இலஞ்ச ஒழிப்புத்துறைக்கு நேரடியாகப் பெறப்பட்டதாகத் தெரியவருகின்றது.
அவற்றில் சிலவற்றுக்கு சட்டமா அதிபர் திணைக்களத்தின் உதவியும் பெறப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த விசாரணைகளுக்கு இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் மூத்த அதிகாரிகள் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a comment