Home தாயகச் செய்திகள் மன்னார் கடற்பரப்பில் கைதான இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

மன்னார் கடற்பரப்பில் கைதான இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

Share
Share

இலங்கைக் கடற்பரப்பினுள் எல்லை தாண்டி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட எட்டு தமிழக மீனவர்களுக்கும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது

கடந்த 29 ஆம் திகதி மன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தமிழகம் – இராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரினுடைய வழக்கு இன்று மன்னார் மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது

வழக்கை விசாரித்த மன்னார் மாவட்ட நீதிவான், இராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரையும் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

கடந்த 29 ஆம் திகதி இராமேஸ்வரம் பகுதியில் இருந்து இயேசு என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் மேற்படி 8 மீனவர்களும் எல்லை தாண்டி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்,

இதேவேளை, இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 23 படகுகளுடன் 174 தமிழக மீனவர்கள் கைதாகியுள்ளனர்

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

இனப்படுகொலைகளை விசாரித்தால் மட்டுமே யதார்த்தத்தை விளங்கிக்கொள்ளலாம் – கஜேந்திரகுமார்!

தமிழ் தேசத்திற்கு நடைபெற்ற முழு அநியாயமும் இனப்படுகொலையும் செயற்பாடுகளையும் ஒரு சந்தர்ப்பத்திலே விசாரிக்கப்பட்டால் மட்டுமே உண்மையான...

சாதாரண தரப்பரீட்சைப் பெறுபேறுகளை மீள் பரிசீலனை செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரல்!

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகளை மீள் பரிசீலனை...

போர்க்கால பிரபல அறிவிப்பாளர் சத்தியா காலமானார்!

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் புலிகளின் குரல் வானொலியின் பிரபல அறிவிப்பாளராக செயற்பட்ட சத்தியா (சிவசுப்பிரமணியம் ஞானகரன்)...

பளையில் இளைஞர் மீது பொலிஸார் தாக்குதல்?

பொலிஸ் புலனாய்வாளர்கள் என்று தம்மை அறிமுகம் செய்ததுடன், பொலிஸ் என்று எழுதப்பட்ட மேலங்கியும் அணிந்திருந்த நால்வரால்...