Home தாயகச் செய்திகள் தமிழரசுக்கட்சியிலிருந்து நீக்கப்படுகிறார் வேழமாலிகிதன்?
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

தமிழரசுக்கட்சியிலிருந்து நீக்கப்படுகிறார் வேழமாலிகிதன்?

Share
Share

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதனை கட்சியில் இருந்து நீக்க இலங்கைத் தமிழரசுக் கட்சி பரிசீலனை செய்துள்ளது.

கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஜீவராசா என்பவர் அடங்கலாக வடக்கு மாகாண ஆளுநரைச் சந்தித்தமை தொடர்பில் ஒரு வார காலத்தினுள் விளக்கம் கோரி கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரனால் வேழமாலிகிதனுக்குக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

அந்த விளக்கம் கோரல் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“கடந்த 19.06.2025 அன்று தாங்களும் இன்னும் மூவரும் வடக்கு மாகாண ஆளுநரைச் சந்தித்து உரையாடியதாக அறியக் கிடைத்தது. அந்த மூவரில் ஒருவர் அண்மையில் கட்சியில் இருந்து விலக்கப்பட்ட ஜீவராசா என்றும் அறியக்கிடைத்தது. இவர் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் எமது கட்சிக்கு எதிராகச் சுயேச்சையாகப் போட்டியிட்டவர். கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலிலும் எமக்கு எதிராகப் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தவர் என்பதும் நீங்கள் நன்கு அறிந்த விடயங்கள்.

வெளிப்படையாகவே கட்சிக்கு எதிராகச் செயற்படும் ஒருவர் உத்தியோகபூர்வ சந்திப்பு ஒன்றில் உங்களுடன் சேர்ந்து கலந்துகொள்வதும் அது பகிரங்க செய்தியாக வெளிவருவதும் கட்சி நலனை வெகுவாகப் பாதிக்கும் என்பது தாங்கள் அறிந்திருக்க வேண்டியதொன்று.

கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தங்களுக்குப் போட்டியிடச் சந்தர்ப்பம் வழங்க முன்னர் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் கட்சியின் தீர்மானத்துக்கு மாறாகச் செயற்பட்டமைக்குத் தாங்கள் மன்னிப்பு கோரியதோடு எதிர்காலத்தில் இப்படியான குற்றத்தைச் செய்தால் எவ்வித விசாரணையும் இன்றி கட்சியில் இருந்தும் கட்சி சார்பில் வகிக்கும் பதவியில் இருந்தும் உடனடியாக நீக்கப்படுவதற்கு உங்களது ஒப்புதலை வழங்கியுள்ளீர்கள்.

ஆகவே ஜீவராஜா போன்ற ஒருவரை ஆளுநரைச் சந்திக்கச் சென்ற உத்தியோகபூர்வ குழுவில் சேர்த்துக்கொண்ட குற்றத்துக்காக நீங்கள் ஏன் கட்சியில் இருந்து நீக்கப்படக்கூடாது என்பதற்குக் காரணம் காட்டி ஒரு வார காலத்துக்குள் எழுத்து மூலம் எனக்குப் பதில் அனுப்பி வைக்கப்பட வேண்டும். இல்லையெனில் அல்லது திருப்திகரமான பதில் அளிக்காவிட்டால் நீங்கள் கட்சியில் இருந்து உடனடியாக நீக்கப்படுவீர்கள் என்பதை இத்தால் தங்களுக்கு அறியத் தருகின்றேன்.” – என்றுள்ளது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

வடக்கில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளின் உரிமையாளர்கள் கொழும்பில் கவனயீர்ப்புப் போராட்டம்!

வடக்கில் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளின் உரிமையாளர்கள் நாளை செவ்வாய்க்கிழமை கொழும்பில் கவனவீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். யாழ்....

வவுனியாவில் வீதியோர வியாபார நிலையங்கள்மாநகர சபையால் அதிரடியாக அகற்றல்!

வவுனியா மாநகர சபையால் இலுப்பையடி வீதியோர வியாபார நிலையங்கள் அகற்றப்பட்ட போது அந்தப் பகுதியில் வீதியோர...

தங்க முலாம் பூசிய துப்பாக்கி விவகாரம்; துமிந்த திஸாநாயக்கவுக்கு பிணை!

கொழும்பு – வெள்ளவத்தையில் உள்ள ஒரு சொகுசு அடுக்குமாடி குடியிருப்பில் தங்க முலாம் பூசப்பட்ட ரி...

கொக்குத்தொடுவாய் புதைகுழி; பகுப்பாய்வு விபரங்கள் வெளியாகின!

முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வில் கண்டெடுக்கப்பட்ட 52 மனித என்புத்தொகுதிகளில், உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் இளவயதினர்...