வவுனியா மாவட்டம் பண்டாரிக்குளம் பகுதியில் உள்ள வீடொன்றில் தீப் பரவல் ஏற்பட்டுள்ளது.
வீட்டின் சாமி அறையில் விளக்கு ஏற்றுவதற்காக தேங்காய் எண்ணெயை பயன்படுத்துவதற்கு பதிலாக தவறுதலாக பெட்ரோலை பயன்படுத்தியமையால் இந்த தீ பரவல் ஏற்பட்டுள்ளது.
குறித்த வீட்டார் இது தொடர்பாக வவுனியா மாநகர சபையின் தீயணைப்பு பிரிவுக்கு அறிவித்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு பிரிவினர் பொதுமக்களின் உதவியுடன் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Leave a comment