தன் பாலின உறவுகளை குற்றமற்றதாக அறிவிக்கும் யோசனை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் வெளியிட்ட கருத்தை நீதி அமைச்சர் ஹர்சன நாணயக்கார மறுத்துள்ளார்.
தன்பாலின திருமணங்களை குற்றமற்றதாக அறிவிக்கும் ஒரு யோசனை தற்போது இலங்கை நாடாளுமன்றத்தில் உள்ளது என்றும் அதனைப் பரிசீலிக்கும் நிலையில் இருப்பதாகவும் இலங்கைக்கான பயணத்தின் இறுதிநாளில் நடத்திய ஊடக சந்திப்பில் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் கூறியிருந்தார். தாம் அதனை வரவேற்கிறார் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதேவேளை, உயர்ஸ்தானிகர் குறிப்பிட்ட யோசனை நாடாளுமன்றத்தில் இதுவரை சமர்ப்பிக்கப்படவில்லை என்றும், அதுபற்றி எந்தவொரு தீர்மானமும் முன்வைக்கப்படவில்லை எனவும் நீதி அமைச்சர் ஹர்சன நாணயக்கார தெளிவுபடுத்தியுள்ளார்
Leave a comment