கடந்த ஏப்ரல், மே மாதங்களில்நாட்டுக்குள் கடத்தப்பட்ட 2 ஆயிரத்து 300 கோடி ரூபாய் பெறுமதியான ஆயிரத்து 758 கிலோ ஹெரோயின், ஐஸ் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகத்தால் முன்னெடுக்கப்பட்ட 4 சோதனை நடவடிக்கைகளில் நெடுநாள் மீன்பிடி படகுகள் மூலம் கடத்தி வரப்பட்ட இந்தப் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன என்று தெரிவிக்கப்பட்டது.
அத்துடன், கடந்த இரண்டு மாதங்களில் மாத்திரம் 25 சந்தேக நபர்களையும் அந்த பணியகம் கைது செய்துள்ளது.
2025ஆம் ஆண்டு இதுவரையிலான காலப்பகுதி வரையில் கடல் வழியாக நாட்டுக்குக் கொண்டு வரப்பட்ட போதைப்பொருளின் அளவு மற்றும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு பொலிஸ் ஊடக பிரிவு இதனை குறிப்பிட்டுள்ளது.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட ஹெரோயினின் பெறுமதி சுமார் ஆயிரத்து 84 கோடி ரூபாய் என்றும் ஐஸ் போதைப்பொருளின் மதிப்பு ஆயிரத்து 216 கோடி ரூபாய் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
Leave a comment