Home தென்னிலங்கைச் செய்திகள் உயர் அதிகாரிகள் 18 பேருக்கு எதிராக விசாரணை!
தென்னிலங்கைச் செய்திகள்

உயர் அதிகாரிகள் 18 பேருக்கு எதிராக விசாரணை!

Share
Share

பல்வேறு ஊழல், மோசடி மற்றும் முறைகேடுகளில் ஈடுபட்டனர் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அமைச்சு செயலாளர்கள் உட்பட அரச உயரதிகாரிகள் 18 பேருக்கு எதிராக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்த விசாரணைகளை இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையம் மற்றும் குற்றப் புலனாய்வுத் துறை ஆகியவை நடத்துகின்றன.

ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான ஐந்து அரச அதிகாரிகள் தற்போது வெளிநாட்டில் இருக்கின்றனர் என்று கூறப்படுகிறது. தேவைப்பட்டால் இந்த அதிகாரிகளை நாட்டுக்கு அழைத்து வரவோ அல்லது கைது செய்யவோ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

ஊழல் மற்றும் முறைகேடுகளை செய்வதற்கு அரசியல்வாதிகளுக்கு உதவினர் என்று குற்றஞ்சாட்டப்பட்ட இந்த பொது அதிகாரிகள் அந்த முறைகேடுகளால் பயனடைந்தனர் என்று விசாரணைக் குழுக்கள் கூறுகின்றன.

பல அதிகாரிகள் பல இலட்சம்  ரூபாய் மதிப்புள்ள நிலம், வாகனங்கள், பிற சொத்துகளை வாங்கியமை பற்றிய தகவல்களும் வெளியாகியுள்ளன. புலனாய்வுக் குழுக்கள் தற்போது இந்த அதிகாரிகளின் வங்கி கணக்குகளை ஆய்வு செய்து வருகின்றன.

தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளரின் சொத்துகள் குறித்தும் லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு விசாரணையை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

பேரிடர்; 159 பேர் பலி – அரசாங்கம் அறிவிப்பு!

நாட்டில் வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களால் கடந்த 16 ஆம்திகதி முதல் இன்று இரவு 8...

இலங்கையில் 56 உயிர்கள் இயற்கைச் சீற்றத்தால் பலி!

இலங்கையை மையங்கொண்டு நகர்ந்துவரும் புயல், மழை உட்பட்ட அதிதீவிர வானிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 56 ஆக...

இலங்கையில் இயற்கை அனர்த்தம்; 31 பேர் பலி! அபாயம் தொடர்கிறது!

சீரற்ற வானிலையினால், கடந்த 17 ஆம் திகதி முதல் இன்று வரை 31 பேர் உயிரிழந்துள்ளதாக...

ரணில் விவகாரம்; பிரித்தானியாவில் விசாரணை மேற்கொண்ட குழு நாடு திரும்புகிறது!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது மனைவியின் பட்டமளிப்பு விழாவில்கலந்துகொள்வதற்காக பிரித்தானிய பல்கலைக்கழகத்துக்கு விஜயம் செய்தபோது,...