Home தாயகச் செய்திகள் 7 வருடங்களின் பின் திறக்கப்பட்ட வவுனியா பொருளாதார மத்திய நிலையம்!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

7 வருடங்களின் பின் திறக்கப்பட்ட வவுனியா பொருளாதார மத்திய நிலையம்!

Share
Share

வவுனியாவில் கடந்த 2018ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட விசேட பொருளாதார மத்திய நிலையம் 7 வருடங்களின் பின்னர் இன்று மக்கள் பாவனைக்காகத் திறக்கப்பட்டது.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் ஊடாக கடந்த 2018ஆம் ஆண்டு வவுனியா மதவுவைத்தகுளத்தில் 293 மில்லியன் ரூபா செலவில் விசேட பொருளாதார மத்திய நிலையம் அமைக்கப்பட்டது.

அதனை ஓமந்தையில் அமைப்பதா அல்லது தாண்டிக்குளத்தில் அமைப்பதா என்று அரசியல்வாதிகளுக்கிடையில் ஏற்பட்ட இழுபறிகளுக்கு மத்தியில் மதவுவைத்தகுளத்தில் அது அமைக்கப்பட்டது.

எனினும், விசேட பொருளாதார மத்திய நிலையம் அமைக்கப்பட்டு ஏழு வருடங்கள் கடந்த நிலையிலும் பல்வேறு காரணங்களால் அது இயங்க முடியாத சூழல் ஏற்பட்டதுடன் அதன் கட்டுமானத்திலும் பழுதுகள் ஏற்பட்டன.

இந்தநிலையில், அந்த நிலையத்தில் மீண்டும் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு இன்று மக்கள் பாவனைக்காக அது கையளிக்கப்பட்டு திறக்கப்பட்டது.

இந்த விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் 50 கடைகள் அனைத்து வசதிகளுடனும் அமைக்கப்பட்டுள்ளன. முதல் கட்டமாக 35 கடைகள் வவுனியா மொத்த வியாபார சந்தை வியாபாரிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதுடன் ஒரு கடை சதொச நிறுவனத்துக்கும் வழங்கப்பட்டுள்ளது.

நிகழ்வில் பிரதம அதிதியாக வர்த்தக வாணிப அமைச்சர் வசந்த சமரசிங்க மற்றும் பிரதி அமைச்சர்களான எம்.ஜெயவர்த்தன, உபாலிசமரசிங்க, வவுனியா மாநகர சபை மேயர் சு.காண்டீபன், நாடாளுமன்ற உறுப்பினர்களான ம.ஜெகதீஸ்வரன், செ.திலகநாதன் ஆகியோரால் நாடா வெட்டி திறக்கப்பட்டது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

தையிட்டியில் போராட்டம்!

தையிட்டியில் தனியாரின் காணியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரையைஅகற்ற வலியுறுத்தி நேற்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஒவ்வொரு பௌர்ணமி...

மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத் தொடர் இன்று தொடக்கம்!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத் தொடர் இன்று திங்கட்கிழமை முற்பகல்...

வங்கிகள் மூலம் மோசடி; மக்களுக்கு எச்சரிக்கை!

வங்கிகள் மூலம் பரிசுகள் வழங்கப்படுவதாக, தற்போது சமூக ஊடகங்களில் உண்மைக்குப் புறம்பான செய்திகள் பகிரப்பட்டு வருவதாக...

33 அரச நிறுவனங்களை மூடுகிறது அரசாங்கம்?

நட்டமடைந்துவருவதாக 33 அரச நிறுவனங்களை மூடிவிடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளபோதும் அந்த நிறுவனங்களின் பெயர்களை இதுவரை வெளியிடவில்லை....